சிவந்தெழுந்த பல்லவராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவந்தெழுந்த பல்லவராயர் தமிழகத்தில் ஆட்சி செய்த குறுநில மன்னர்களான பல்லவராயர்களில் கடைசி மன்னர் ஆவார்.[1] இவர் கள்ளர் மரபைச் சேர்ந்தவர்.[2][3] பல்லவராய மன்னர்கள் சேதுபதியின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தனர். சிவந்தெழுந்த பல்லவராயர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் ஆட்சி செய்தார்.[4] இவர் சேதுபதியின் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாமல் தனியாட்சியாக இருக்க விரும்பி, தஞ்சை மராட்டிய மன்னர் எக்கோஜியின் உதவியை நாடினார்.[4] இதனை அறிந்த சேதுபதி, சிவந்தெழுந்த பல்லவராயரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 17-ஆம் நூற்றாண்டில் இவர் வசம் இருந்த புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதிகளை இரகுநாதராயத் தொண்டைமானுக்கு ஒப்படைத்து, அவரை 1686-இல் மன்னர் பதவிக்கு உயர்த்தினார்.[4] அக்காலப்பகுதியில் புதுக்கோட்டை, பல்லவராயன் சீமை[4] என்றும், கள்ளர்ச்சீமை என்றும் [5] அழைக்கப்பட்டது.

புதுக்கோட்டை பல்லவராயர்கள் ஆட்சி செய்த பகுதிகளாக ஆலங்குடி நாடு, அமராபதி நாடு, கடவன்குடி நாடு, செங்காட்டூர் நாடு, திருப்பேரையூர் நாடு, வல்லநாடு, மெய்மலை நாடு, சந்திரேக்க நாடு, கொடுங்குன்றநாடு, கோளக்குடி நாடு, கோனாடு ஆகிய பகுதிகள் குறிக்கப்படுகின்றன.[6] மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பல்லவராயர் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார்.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Gazetteer of India Tamil Nadu - Pudukkottai district. pp. 144–149.
  2. Gazetter of pudukkottai district. pp. [1].
  3. "தமிழ்நாடும் மொழியும்".
  4. 4.0 4.1 4.2 4.3 புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள். p. 24.
  5. "சேதுபதி மன்னர் வரலாறு".
  6. Manual of pudukkottai state vol 2 part 1. pp. 233–261.
  7. புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள். p. 21.