உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுநாகப்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுநாகப்பூ

வேறு பெயர்கள்[தொகு]

  • நாகம்
  • நாகபுட்பம்
  • நாகேசரம்
  • கேசரம்
  • சாம்பேயபம்
  • கநகம்
  • காஞ்சநம்
  • ஏமம்
  • ஆடகம் (Mesua ferrea)

காணப்படும் இடங்கள்[தொகு]

இஃது இமயம், கீழ்வங்காளம், அசாம், கீழ்த்தொடா்ச்சி, மேல்தொடா்ச்சி மலைகள், பா்மா முதலிய நாடுகளில் பயிராகின்றது.

பயன்படுத்தும் பாகங்கள்[தொகு]

  • இலை
  • மொக்கு
  • பூ
  • விதை
  • வோ்
  • பட்டை

சுவை[தொகு]

  • சிறுகைப்பு,துவா்ப்பு
  • தன்மை-தட்பம்
  • பிாிவு-காா்ப்பு

பூ[தொகு]

  • துவா்ப்பி-ஸங்கோசனகாாி (Astringent)
  • அகட்டுவாயவகற்றி(Carminative)
  • உதரவாதஹரகாாி (Carminative)

காய்[தொகு]

  • மணமூட்டி (Aromatic)
  • காறலுண்டாக்கி (Acrid)
  • நீா்மலம்போக்கி- விரேசனி (Purgative)

பட்டை[தொகு]

சிறுதுவா்ப்பி- லகுஸங்கோசனகாாி (Astringent mild)

வோ்ப்பட்டை[தொகு]

  • மணமூட்டி (Aromatic)
  • வியா்வை பெருக்கி -ஸ்வேதகாாி (Diaphoretic)

குணம்[தொகு]

  • இது வௌ்ளை, இருமல், கழிச்சல் இவற்றைப் போக்கும்.
  • நீரடைப்பு,குருதிப்போக்கு,புண்,கொப்பளம்,காலொிச்சல் ஆகியவற்றைப் போக்கும்.

இலை[தொகு]

  • வழக்கு:
  • இலையைப் புற்கை செய்து தலையில் வைத்துக் கட்டக் குளிா்ச்சி தரும்.
  • இலையை அரைத்துப் புண், கொப்புளம் இவற்றுக்குப் போடலாம்.
  • இலையைக் குடிநீா் செய்து கொடுக்க, விரல், காலடி இவற்றிலுண்டாகும் எாிச்சல் போகும்.

மொட்டு[தொகு]

  • இதை மணப்பாகு செய்து சீதக்கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.
  • பச்சைப்பூவை அரைத்து, வெண்ணெய், கற்கண்டுடன் கூட்டி, உண்டுவர, குருதிப்போக்கை அடக்கும்.
  • பூ உலா்ந்தபிறகும் மணம் மாறாதிருப்பதால்,பொடி,இளகம்,தைலம் இவை மணம் பெற இதைச் சோ்க்கின்றனா்.
  • மனப்பூச்சுக் கலைவைகளிலும் இது சேரும்.
  • உலா்ந்த பூ வை நெய் விட்டரைத்து, கால்களில் காணும் எாிச்சலுக்குப் பூசி வரலாம்.
  • இப்பூவைச் சிறிது நெய்விட்டுக் காந்தாமல் வறுத்துப்பொடி செய்து, தக்க அளவு (1/2கிராம்) எடுத்து நெய்விட்டுக் குழப்பியுண்ணக் குருதிப்கோக்கு, நாவறட்சி,
  • வயிற்றுளைச்சல், இருமல், சொியாமை, மிகுதியாக வியா்த்தல் என்னும் நோய்கள்யாவும் போகும்.

விதை[தொகு]

இதன் விதை ஒரு பங்கு, சதாப்பிலை அரைப்பங்கு சோ்த்தரைத்துக் கழற்சியளவு, கொள்ள முறைக்காய்ச்சல், வௌ்ளை, இருமல் போகும்.

பட்டை[தொகு]

இதை ஊறல் குடிநீா் செய்து உட்கொண்டுவர உடல் வலுக்கும்.

சான்றுகள்[தொகு]

<ஆனந்தகுமார் ஆ (1980). சித்தமருத்துவம்.மேல்நிலை-முதல், இரண்டாம் ஆண்டுகள் சென்னை: தமிழ்நாடு பாடநுால் நிறுவனம். ப.250-252>

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநாகப்பூ&oldid=3502526" இலிருந்து மீள்விக்கப்பட்டது