உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Anbumunusamy: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 155: வரிசை 155:


குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 09:22, 13 சனவரி 2016 (UTC)
குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 09:22, 13 சனவரி 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Barnstar of Diligence Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | விடாமுயற்சியாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | நீங்கள் விடாமுயற்சியுடன் பங்களிக்கக் கற்றுக்கொண்டு தொடர்ந்து கட்டுரைகளை பங்களிக்கிறீர்கள். எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தினை மகிழ்வுடன் அளிக்கிறேன். --[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 18:53, 19 சனவரி 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#18|பதிகை]])</small>
|}

18:53, 19 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1

வாருங்கள்!

வாருங்கள், Anbumunusamy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- அன்புமுனுசாமி (பேச்சு) 07:19, 29 மே 2015 (UTC)[பதிலளி]






சேர்ந்து நடைபயிலலாம்

சகோதரர், அன்புமுனுசாமி தங்களின் மொழி ஆர்வத்தினை மெச்சுகின்றேன். பயிற்சியும், முயற்சியும் உங்களது எண்ணங்களை சாதனையாக்கும் ஆக விடாமுயற்சியால் வெல்லுங்கள். எனது விக்கி பயண அனுபவத்தினை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், அது உங்களுக்கு உத்வேகமளிக்கும் என நம்புகின்றேன். விக்கியின் வளர்ச்சியின் மேலுள்ள எண்ணங்களின் காரணமாக எமது விக்கியின் ஆரம்பகாலங்களில் விக்கிசகோதரர்கள் பல தடையினை எமக்கும் ஏற்படுத்தினார்கள், பல கட்டுரைகளுக்கு பின்னரே என் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் விக்கியில் தொடர்ச்சியாக எழுதுவோரின் பல கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் மட்டுமின்றி கருத்தாங்களும் மாற்றமடைவது வழமையானதுவே... ஆக நீங்கள் தளரவேண்டாம்.


விக்கி திறந்தவெளி மைதானம் போன்றது எனினும், இது அனைவராலும் அறிவுத்தேடலுக்கு பயன்படுத்தகூடியது என்பதை மனதில் வைத்து செயற்படுவோம். ஒரு முறை நம்பகத்தன்மை போய்விடின் மீட்பது கடினம், நான் வெளிப்படையாக விக்கியில் எழுதவதைப் பற்றி என் நண்பர்களிடத்தும் விவாதிப்பது இல்லை, ஏனெனில் இது தற்பெருமைபடத் தகுந்த விசயமென்பதை விட பல மாணக்கர்களுக்கு பயன்படவேண்டும் என்பதுவே எனது எண்ணம். புரியவில்லையா, என் நண்பர்கள் இவனுக்கு என்ன தெரியும் இவன் சென்று அங்கு என்ன எழுதிக் கிழிக்கிறான் என்ற எண்ணம் தோன்றுமெனில் அது விக்கியின் நம்பிக்கையை அசைத்துப் பார்க்குமென்பேன். விக்கியில் பல்துறைவித்தகர்கள், ஆதாரங்கள் இருப்பினும் வெகுஜன எண்ணங்களை வெல்வது என்பது முக்கியமென்பதையும் கவனத்தில் கொள்ளவும். இது பெருமைத்தரக்கூடிய விசயமென்பதுவைவிட அறம் சார்ந்த அர்ப்புணிப்புடன் கூடிய தர்மம் ஆகும். ஆக இதனையும் கவனத்தில் கொள்ளுதல் நலம். இதனால்தான் நமது நிர்வாகிகள் கடுமை செலுத்துகின்றார்கள். :)

ஆரம்பகாலத்தில் என்ன மாதிரியான கட்டுரையை எடுப்பது

பொதுவாக ஒரு குறிப்பிட்ட கருத்துகொண்ட கட்டுரையை தொடர்ச்சியாக எடுத்தாள்வது நமக்கு மொழிச்செழிமையையும், வாக்கிய நடையையும், சொற்கள் கையாளுவதையும் எளிதாக்கும். எ.கா, நீங்கள் சிறப்புத் தினங்கள் பற்றி எழுதி வருகிறீர்கள், நான் எனது ஆரம்ப காலங்களில் தொடருந்து பற்றிய கட்டுரைகளை எழுதுவதை சகோதரர் மா. செல்வசிவகுருநாதன் ஊக்குவித்தார் என்பதையும் பதிவு செய்யவிரும்புகிறேன். இதனால் உங்களுக்கு எப்படி கட்டுரையை கொண்டு செல்வது, மேலும் சொற்கள் உருவாக்கம் போன்றவை எளிதாகும்.

விக்சனரி, கூகுள் மொழியாக்கம் (இது விக்கியில் தடைச்செய்யப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்க) போன்றவற்றின் மூலம் தேவைப்படின் மொழியாக்கம் செய்யுங்கள் ஆனால் உங்கள் கண்ணோட்டத்தினை அதில் அழுத்தமாக பதிக்கவும்.

முதலில் மற்ற கட்டுரைகளை வாசிக்கத்தொடங்குவோம், பின்பு அந்தக் கட்டுரைகளிலுள்ள பிழைகளைத் திருத்தம் செய்வதன் மூலம் எப்படி கட்டுரையை விக்கியில் சமைக்கிறார்கள் என்பதறிவது எளிது.

முதலில் கட்டுரையின் தலைப்பிற்கேற்ற எண்ணங்களை குறைந்தப் பட்சம் இரண்டொரு வாக்கியங்களில் அமையுங்கள். பின்பு விரிவாக்கம் செய்யுங்கள். எந்த கட்டுரைக்கும் ஆதாரம், மேற்கோள்கள் முக்கியம், அதனால் அதனை கட்டாயம் இணையுங்கள்.

பின்பு வார்ப்புருக்கள் (Template) இருந்தால் இணையுங்கள், அனைத்துக் கட்டுரைகளையும் ஏற்கனவே உள்ள பகுப்பில்(category) இணையுங்கள். கடைசியாக பொருத்தமான ஆங்கில கட்டுரையோடு இணையுங்கள்.(இடதுபுறம் கிழுள்ள மொழிப்பட்டியலில்)

ஆரம்பநாட்களில் செய்யக்கூடாதவைகள்

அனைத்து கட்டுரைகளிலும் பயன்படுத்தப்படும் பகுப்பு உருவாக்கம் அல்லது வார்ப்புருக்கள் உருவாக்கம் முதலியவற்றை தவிர்த்துவிட்டு கட்டுரையில் கவனம் செலுத்தல் நலமென்பேன், தொடர்ச்சியாக நீங்கள் செயற்படும்பொழுது பகுப்புகள் பற்றிய எண்ணங்கள் வளரும், அப்பொழுது அதனை உருவாக்கி கொள்ளலாம். ஆனால் வார்ப்புருக்கள் பெரும்பாலும் நிரல்மொழி (software) தொடர்பு கொண்டவை அதனால் அதன் உருவாக்கம் விரிவாக்கம் போன்றவற்றில் தள்ளி இருப்பது நலம். நானும் சில வார்ப்புருக்களை தமிழ் படுத்த முயன்றபொழுதுதான் அதன் நீட்சி ஆங்கில விக்கிபீடியா வரை சென்றதை அறியமுடிந்தது. அதனால் வார்ப்புருக்களில் கூடுதல் கவனம் தேவை.

ஆரம்பநாட்களில் ஆர்வ மிகுதியால் கட்டுரையின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துதல் என்பது இயல்பே. ஆனால் எண்ணிக்கையை விட கருத்தாக்கமே முக்கியமானது, இரண்டொரு வாக்கியமைப்பு கட்டுரையாக கூட எழுதுங்கள் ஆனால் பொருள் செறிவுடன் எழுதுங்கள். இங்கு நமது கட்டுரைகள் திருத்தப்படுவது என்பது இயல்பு எனினும், மற்றவர்களின் பங்களிப்பு நமது கட்டுரைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இருக்கவேண்டுமேயொழிய பிழைத்திருத்தங்கள், சந்திப்பிழை போன்றவைகள் மற்றவர்களினால் திருத்தப்படா வண்ணம் கட்டுரையை முதலிலே செயற்படுத்துங்கள். இதனால் நிர்வாகிகளின் பணி எளிதாகும்.

உங்களது பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் கட்டுரையினை எனதறிவிற்கு எட்டியவரை திருத்தியுள்ளேன். பாருங்கள் உங்களுக்கு பயன்தரும். முற்றுப்புள்ளி காற்புள்ளிகளுக்கு பின்புறம் இடைவெளி விடுங்கள். ஏற்கனவே உள்ள தமிழ் விக்கி கட்டுரைகளை பொருத்தமான இடங்களில் இணையுங்கள். எ.கா தமிழ் பல்கலைக்கழகம் என்ற இடத்தில் தமிழ் என்று இணைத்திருந்தீர்கள் ஆனால் பொருத்தமானது தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். நேரம் கிடைத்தால் உங்கள் மற்ற கட்டுரைகளையும் திருத்துகின்றேன்.

இதனால் நீங்கள் மனக்கலக்கம் அடையவேண்டாமென்பது என்னுடைய தாழ்மையான விண்ணப்பம், வாருங்கள் சேர்ந்து நடைபயிலலாம். பொழுதுப்போக்கினை கூட பிறர்க்கு பயன்படும் வகையில் நீங்கள் முயலுவது என்னை வியப்பாக்குகின்றது. எம்முடைய தனிப்பட்ட விருப்பம்யாதெனில் ஆண்டுதோறும் பேராசிறியர்கள் அனைவரும் இது போன்ற கட்டுரைகளை ஒன்றோ இரண்டோ உருவாக்கவேண்டும் என்பதுவே...--குறிஞ்சி (பேச்சு) 10:01, 30 செப்டம்பர் 2015 (UTC)

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதி மேம்படுத்துவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். நன்றி  மாதவன்  ( பேச்சு  ) 17:15, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  • @( மாதவன்  ( பேச்சு  )அடியேன் ஆனந்த வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன், விக்கியின் பயணத்தில் இதுவே எனது முதல் பதக்கம் விக்கியன்பு மூலம் வழங்கிய இப்பதக்கத்தை என் வாழ்நாளில் கிடைத்த பொக்கிஷமாக போற்றி மகிழ்கிறேன், ஆக்கங்கள் தரும் ஊக்கமாக என்னி களிக்கின்றேன். விக்கிக்கும் இதை விதைத்தோர்க்கும் அகமகிழ்ந்து நன்றி கூறுகிறேன்.--அன்புமுனுசாமி (பேச்சு) 21:15, 09 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

முயற்சியைப் பாராட்டுகிறேன்

நீங்கள் மிகவும் முயன்று எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். உண்மையாகவே மன மகிழ்வுடன் பாராட்டுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 16:51, 13 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்



அடியேன் பங்களிப்பை பறைசாற்றியமைக்கு நன்றிகள்--அன்புமுனுசாமி
அயராத உழைப்பிற்கு வெற்றி உறுதி! நேசத்துடன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:58, 8 சனவரி 2016 (UTC)[பதிலளி]
@மா. செல்வசிவகுருநாதன், நேசத்திற்கு வணக்கம், தாங்களின் ஊக்கத்தை சிரம் தாழ்த்தி ஏற்கிறேன். அன்புடன்...--அன்புமுனுசாமி 13:13, 8 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:00, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - நிறைவு

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:22, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

விடாமுயற்சியாளர் பதக்கம்
நீங்கள் விடாமுயற்சியுடன் பங்களிக்கக் கற்றுக்கொண்டு தொடர்ந்து கட்டுரைகளை பங்களிக்கிறீர்கள். எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தினை மகிழ்வுடன் அளிக்கிறேன். --நந்தகுமார் (பேச்சு) 18:53, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Anbumunusamy&oldid=2007493" இலிருந்து மீள்விக்கப்பட்டது