சிங்காரவேலர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்காரவேலர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு (இதற்கு முன் ஒரு இலட்சம் ரூபாயாக இருந்தது) இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்[தொகு]

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 பா.வீரமணி[1] 2018
2 அசோகா சுப்பிரமணியன் (எ) சோ. கா. சுப்ரமணியன் 2019
3 ஆ. அழகேசன்[2] 2020
4 மதுக்கூர் இராமலிங்கம்[3] 2021

மேற்கோள்கள்[தொகு]

  1. "கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி உள்ளிட்ட 56 பேர் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுக்கு தேர்வு: முதல்வர் பழனிசாமி சென்னையில் இன்று வழங்குகிறார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-04.
  2. "திருவள்ளுவர் விருது, சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு". Dinamalar. 2021-01-13. பார்க்கப்பட்ட நாள் 2021-03-04.
  3. "மதுக்கூர் ராமலிங்கத்திற்கு சிங்காரவேலர் விருது அறிவிப்பு". தீக்கதிர். 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்காரவேலர்_விருது&oldid=3392144" இலிருந்து மீள்விக்கப்பட்டது