உள்ளடக்கத்துக்குச் செல்

சாண்டி ஆலென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாண்டி ஆலன்
Sandy Allen
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலெக்சாண்டர் பிலிப் வோர்ட்லி ஆலன்
பிறப்பு13 அக்டோபர் 1984 (1984-10-13) (அகவை 39)
சோலிகல், வார்விக்சயர் மாகாணம்
மட்டையாட்ட நடைவலது கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தரத் துடுப்பாட்டம் பட்டியல் அ துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 1 2
ஓட்டங்கள் 18 15
மட்டையாட்ட சராசரி 7.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 18* 10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 1/–
மூலம்: CricketArchive, 6 சூலை 2019

அலெக்சாண்டர் பிலிப் வோர்ட்லி ஆலன் (Alexander Philip Wortley Allen) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரராவார். முன்னாள் வீரரான இவர் ஒர் இல்லக்குக் காப்பாளராகவும் வலது கை ஆட்டக்காரராகவும் முதல் தர போட்டிகளில் விளையாடினார்.[1] 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று இவர் வார்விசயர் மாகாணம், சோலிகல் நகரத்தில் பிறந்தார். 2002 ஆம் ஆண்டில் வார்விக்சயர் மாகாண துடுப்பாட்ட சங்கத்திற்காக ஒரு முதல் தர போட்டியில் விளையாடினார். அப்போட்டியில் இவர் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்கள் எடுத்தார் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக ஒரு பந்து பிடித்தல் நிகழ்த்தி ஒருவரை ஆட்டமிழக்கச் செய்தார். மேலும் 2005 ஆம் ஆண்டில் தெவோனுக்காக இரண்டு பட்டியல் ஏ ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார். 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரை தெவோனுக்காக சிறிய போட்டிகளிலும் விளையாடினார். இவரது தாத்தா எசுமண்டு இலூயிசும் முதல்தர துடுப்பாட்ட வீரராக இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வார்விக்சயர் அணிக்காக அவர் 47 போட்டிகளில் விளையாடினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sandy Allen". www.cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 23 November 2015.
  2. Sandy Allen at ESPNcricinfo
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாண்டி_ஆலென்&oldid=3642843" இலிருந்து மீள்விக்கப்பட்டது