சரவாக் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவாக் இராச்சியம்
State of Sarawak
1841–1941
1945–1946
கொடி of சரவாக்
கொடி
சின்னம் of சரவாக்
சின்னம்
குறிக்கோள்: (நான் சுவாசிக்கும்போது, நான் நம்புகிறேன்)
நாட்டுப்பண்: 
கடலுக்கு அப்பால் சென்றது
1920-களில் சரவாக் இராச்சியம்
1920-களில் சரவாக் இராச்சியம்
நிலைசுதந்திர இராச்சியம் (1888 வரை)
ஐக்கிய இராச்சியத்தின் காப்புநாடு
தலைநகரம்கூச்சிங்
பேசப்படும் மொழிகள்ஆங்கிலம், இபான் மொழி, மெலனாவ் மொழி, பிடாயு மொழி, சரவாக் மலாய் மொழி, சீனம்
அரசாங்கம்முழுமையான முடியாட்சி (2012)
பிரித்தானியம் (1942)
வெள்ளை இராஜா 
• 1841 – 1968
ஜேம்சு புரூக் (முதலாவது)
• 1917 – 1946
சார்லசு வைனர் புரூக் (கடைசி)
வரலாற்று சகாப்தம்புதிய பேரரசுவாதம்
• நிறுவல்
24 செப்டம்பர் 1841
• காப்புநாடு
14 சூன் 1888
• சப்பானிய ஆளுகை
16 திசம்பர் 1941
• கூட்டுப்படைகளின் விடுவிப்பு
10 சூன் 1945
• முடிக்குரிய குடியேற்ற நாடு
1 சூலை 1946
பரப்பு
1945124,450 km2 (48,050 sq mi)
மக்கள் தொகை
• 1841
8000
• 1848
150000
• 1893
300000
• 1933
475000
• 1945
600000
நாணயம்சரவாக் டொலர்
முந்தையது
பின்னையது
புரூணை இராச்சியம்
சரவாக் சுல்தானகம்
சப்பானியரின் ஆளுகை
பிரித்தானிய இராணுவ நிருவாகம் (போர்னியோ)
சரவாக் முடிக்குரிய குடியேற்ற நாடு
தற்போதைய பகுதிகள் மலேசியா

சரவாக் இராச்சியம் அல்லது சரவாக் நாடு (ஆங்கிலம்: Raj of Sarawak; அல்லது State of Sarawak (மலாய்: Kerajaan Sarawak) என்பது போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்து இருந்த ஒரு பிரித்தானியாவின் காப்பு நாடாகும். புரூணை சுல்தானகத்தில் இருந்து ஜேம்சு புரூக் (James Brooke) எனும் ஆங்கிலேயர் பெற்ற சில பகுதிகளைக் கொண்ட ஒரு சுதந்திர நாடாக சரவாக் நாடு உருவாக்கப்பட்டது.

1850-ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவும்; 1864-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியமும் சரவாக் இராச்சியத்தைத் தனி நாடாக அங்கீகரித்தன.

பொது[தொகு]

சரவாக் இராச்சியம் தனிநாடாக அங்கீகரிக்கப் பட்டதும், ஜேம்சு புரூக் புரூணையில் இருந்து மேலும் சில பகுதிகளைச் சரவாக் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார். இவரின் ஆட்சிக்கு எதிராக சரவாக் இராச்சியத்தில் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன. அந்தக் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு ஏற்பட்ட செலவுகளாலும், அக்காலக் கட்டத்தில் நிலவிய பொருளாதார மந்த நிலையினாலும், புரூக் பெரும் கடனாளியானார்.

ஜேம்சு புரூக்கிற்குப் பின்னர் அவரின் மருமகன் சார்லசு புரூக் (Charles Brooke) ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவரின் ஆட்சியில் சரவாக் நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் கண்டது, அரசுக் கடன்கள் குறைந்தன. பொதுக் கட்டமைப்புகள் உருவாகின. 1888-ஆம் ஆண்டில் சரவாக் நாடு பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்ட காப்புநாடாக அறிவிக்கப்பட்டது.

சார்லசு புரூக்[தொகு]

பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காக, சார்லசு புரூக் சீனாவில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் தொழிலாளர்களை வரவழைத்து வேளாண்மைப் பணிகளில் ஈடுபடுத்தினார். மிக விரைவிலேயே, மிளகு உற்பத்தியில் சரவாக் நாடு, உலகின் முன்னணி இடத்திற்கு வந்தது. அத்துடன் எண்ணெயும் இயற்கை மீள்ம உற்பத்தியிலும் முன்னிலைக்கு வந்தது.

சார்லசு புரூக்கிற்குப் பின்னர் அவரின் மகன் சார்லசு வைனர் புரூக் (Charles Vyner Brooke) ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால் இரண்டாம் உலகப் போர், மற்றும் சப்பானியரின் வருகை இந்த இராச்சியத்திற்கு ஒரு முடிவுப் புள்ளியாக அமைந்தது.

சார்லசு வைனர் புரூக்[தொகு]

சார்லசு வைனர் புரூக், ஆத்திரேலியாவில் தஞ்சம் அடைந்தார்.[1] 1942-இல் சரவாக் நாடு சப்பானியரின் இராணுவ ஆளுகைக்குக் கீழ் வந்தது. போரின் இறுதியில், 1946-இல் பிரித்தானிய முடியாட்சிக்கு உரிய குடியேற்ற நாடாகியது.

பெரும்பாலான ஆஸ்திரேலிய, பிரித்தானியப் போர்க் கைதிகள் சரவாக்கில் சிறை வைக்கப் பட்டனர். பசிபிக் போர்க் காலத்தில் கூட்டுப் படைகள் கிழக்கில் தமது இருப்பை நிலை நிறுத்தினர். பின்னர் அவர்கள் போர்னியோ தீவை விடுவித்தனர்.

சப்பானியப் படைகள்[தொகு]

இந்தக் காலப் பகுதியில், சரவாக்கின் முக்கிய நகரங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டன.[2] 1945 ஆகத்து 15-இல் சப்பானியப் படைகள் சரண் அடைந்ததை அடுத்து போர் முடிவு அடைந்தது.

1945 செப்டம்பரில் இருந்து சரவாக்கின் நிர்வாகம் பிரித்தானிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சார்லசு வைனர் புரூக், நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொருட்டு நாடு திரும்பினார், ஆனாலும், பின்னர் காலத்தில் அதன் நிருவாகத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தார்.

1946 சூலை 1-இல் சரவாக் பிரித்தானியாவின் முடியாட்சிக்கு உரிய குடியேற்ற நாடாகியது.[3][4][5] இந்தச் சரவாக் இராச்சியம் 1963 செப்டம்பர் 16-இல் சரவாக் என்ற பெயரில் மலேசியக் கூட்டமைப்பில் ஒரு மாநிலமாக இணைந்தது.

அடிக்குறிப்புகள்[தொகு]

நூல்கள்[தொகு]

  • Runciman, Steven (1960). "The White Rajahs". Cambridge University Press. University of Allahabad, Digital Library of India. p. 340.
  • "Sarawak: A Kingdom in the Jungle". The New York Times. 1986 இம் மூலத்தில் இருந்து 1 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170801125549/http://www.nytimes.com/1986/07/13/travel/sarawak-a-kingdom-in-the-jungle.html. 
  • "Sarawak: A Most Unusual Territory". The London Gazette இம் மூலத்தில் இருந்து 4 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170804182705/https://m.thegazette.co.uk/all-notices/content/100727. 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • The Brooke Trustபுரூக் வம்சத்தின் பாரம்பரியம் பற்றிய கூடுதல் தகவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்_இராச்சியம்&oldid=3956209" இலிருந்து மீள்விக்கப்பட்டது