சம்பிரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பிரதி
5-வது மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 224 - 215
முன்னையவர்தசரத மௌரியர்
பின்னையவர்சாலிசுகா
அரசமரபுமௌரிய வம்சம்
தந்தைகுணாளன்
தாய்காஞ்சனமாலை
மதம்சமணம் [1]


சம்பிரதி (Samprati) (ஆட்சிக் காலம்: கிமு 224 - 215), மௌரியப் பேரரசின் ஐந்தாம் சக்கரவர்த்தி ஆவார். இவர் பேரரசர் அசோகரின் பேரனும், கண்கள் குருடாக்கப்பட்ட அசோகரின் மகனாக குணாளனின் மகனும் ஆவார். சம்பிரதி, தனது பங்காளியான தசரத மௌரியரின் மறைவிற்கு பின் மௌரியப் பேரரசின் அரியணை ஏறியவர்.

வரலாறு[தொகு]

அசோகரின் முதல் மகன் மகிந்தன் பௌத்த சமயத்தை இலங்கையில் பரப்பச் சென்றதால், குணாளன் மௌரியப் பேரரசின் பட்டத்து இளவரசர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால், குணாளனின் கண்கள், ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டது.

குணாளன் அசோகரின் பட்டத்தரசிகளில் ஒருவரான சமணச் சமயத்தைச் சேர்ந்த் பத்மாவதியின் மகன் ஆவார். குணாளன் அரியணை ஏறிவிடக்கூடாது என்பதற்காக, சதிச் செயல் மூலம், குணாளனின் கண்கள் குருடாக்கப்பட்டது. எனவே குணாளனால் அரியணை ஏற உரிமை இல்லாது போனதால், தன் மகன் சம்பிரதியுடன், மகதத்தை விட்டு, உச்செயினுக்குச் சென்றார். பின்னர் மௌரியப் பேரரசராக தசரத மௌரியர் அரியணை ஏறினார்.

உச்செயினில் குணாளனுடன் வளர்ந்து கொண்டிருந்த சம்பிரதி, ஒரு முறை இருவரும் படாலிபுத்திரம் சென்று, அசோகரிடம் தனது அரியணை உரிமை கோரினார். தசரத மௌரியருக்குப் பின்னர் சம்பிரதிக்கு அரியணை ஏறும் உரிமை வழங்கப்படும் என அசோகர் உறுதியளித்தார். கிமு 224ல் தசரத மௌரியர் இறந்த பிறகு சம்பிரதி மௌரியப் பேரரசர் ஆனார்.

சமண சமயத்தை பின்பற்றும் சம்பிரதி 9 ஆண்டுகள் அரசாண்டர். சமண சமய இலக்கியங்களின் படி, சம்பிரதி பாடலிபுத்திரம் மற்றும் உஜ்ஜைன் ஆகிய நகரங்களைத் தலைநகரங்களாகக் கொண்டார்.[2] முன்னர் தசரத மௌரியர் ஆட்சியின் போது, ஆந்திரம் மற்றும் மைசூர் இராச்சியங்கள், மௌரியப் பேரரசிலிருந்து விடுபட்டு தன்னாட்சியுடன் ஆண்டது. சம்பிரதி ஆட்சிக் காலத்தில் மீண்டும் ஆந்திரம் மற்றும் மைசூர் இராச்சியங்களை வென்று மௌரியப் பேரரசில் இணைத்தார்.[3]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Cort 2010, ப. 199.
  2. Thapar, Romila (2001). Aśoka and the Decline of the Maurya, New Delhi: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564445-X, p.187
  3. Moti Chandra (1977). Trade and Trade Routes in Ancient India. Abhinav Publications. pp. 75–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-055-6.

மேற்கோள்கள்[தொகு]

சம்பிரதி
முன்னர் மௌரியப் பேரரசர்
கிமு 224–215
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பிரதி&oldid=3827722" இலிருந்து மீள்விக்கப்பட்டது