சந்தேஷ்காளி

ஆள்கூறுகள்: 22°21′59″N 88°52′35″E / 22.366465°N 88.876436°E / 22.366465; 88.876436
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தேஷ்காளி
சந்தேஷ்காளி is located in மேற்கு வங்காளம்
சந்தேஷ்காளி
சந்தேஷ்காளி
சந்தேஷ்காளி is located in இந்தியா
சந்தேஷ்காளி
சந்தேஷ்காளி
சந்தேஷ்காளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°21′59″N 88°52′35″E / 22.366465°N 88.876436°E / 22.366465; 88.876436
நாடு இந்தியா
இந்தியாமேற்கு வங்காளம்
மாவட்டம்வடக்கு 24 பர்கனா மாவட்டம்
மொழி
 • அலுவல்வங்காள மொழி,இந்தி,ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
743446 (சந்தேஷ்காளி)
தொலைபேசி குறியீடு03218
மக்களவைத் தொகுதிபாசீர்காட்
மாநிலச் சட்டப் பேரவைசந்தேஷ்காளி
இணையதளம்north24parganas.nic.in

சந்தேஷ்காளி (Sandeshkhali என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் பாசிர்காட் உட்பிரிவில் சந்தேஷ்காலி II தொகுதியில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

நிலவியல்[தொகு]

அமைவிடம்[தொகு]

சந்தேஷ்காளி 22°21′59″N 88°52′35″E / 22.366465°N 88.876436°E / 22.366465; 88.876436 நில அமைவில் அமைந்துள்ளது

பகுதி கண்ணோட்டம்[தொகு]

வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள பகுதி, கீழ் கங்கை வடிநிலத்தில் அமைந்துள்ள இச்சாமதி-ராயமங்கல் சமவெளியின் ஒரு பகுதியாகும். இது முதிர்ந்த கருப்பு அல்லது பழுப்பு நிற களிமண் முதல் சமீபத்திய வண்டல் மண்ணைக் கொண்டுள்ளது. ஏராளமான ஆறுகள், சிற்றோடைகள் மற்றும் கால்வாய்கள் இப்பகுதி வழியாகச் செல்கின்றன. சுந்தரவன தேசிய பூங்காவின் முனை வரைபடத்தின் கீழ்ப் பகுதியில் காணப்படும் (பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது ஆனால் குறிக்கப்படவில்லை). பெரிய முழுத்திரை வரைபடம் முழு வனப்பகுதியையும் காட்டுகிறது.[1] இப்பகுதியின் பெரும் பகுதி சுந்தரவனக் குடியிருப்புகளின் ஒரு பகுதியாகும்.[2] மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதி கிராமப்புற பகுதியாகும். மக்கள்தொகையில் 12.96% மட்டுமே நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர் மற்றும் 87.04% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.[3][4]

குறிப்பு: துணைப்பிரிவில் உள்ள சில குறிப்பிடத்தக்க இடங்களை வரைபடம் காட்டுகிறது. வரைபடத்தில் குறிக்கப்பட்ட அனைத்து இடங்களும் பெரிய வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

நிர்வாகம்[தொகு]

காவல் நிலையம்[தொகு]

சந்தேஷ்காளி காவல் நிலையம் இங்குள்ள 328,989 மக்களுக்கு சேவை செய்கிறது. இது சந்தேஷ்காளி II சிடி தொகுதியின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. ராஜ்பாரியில் ஒரு புறக்காவல் நிலையம் உள்ளது.[5]

தொகுதி தலைமையகம்[தொகு]

சந்தேஷ்காளி II சிடி பிரிவின் தலைமையகம் துவாரிர் வனப்பகுதியில் அமைந்துள்ளது.[6]

மக்கள்தொகை[தொகு]

மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு கையேட்டில் உள்ள சந்தேஷ்காளி II சிடி பிரிவின் வரைபடத்தில், சந்தேஷ்காளி கிராமம் எண். 884 துவாரிர் காட்டுப்பகுதியின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது.[7]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, துவாரிர் காட்டுப்பகுதியின் மொத்த மக்கள்தொகை 11,155 ஆகும். இதில் 5,760 (52%) ஆண்கள் மற்றும் 5,395 (48%) பேர் பெண்கள் ஆவார். 0-6 வயது வரம்பில் மக்கள்தொகை 1,321. துவாரிர் காட்டுப்பகுதியில் கல்வியறிவு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 6,857 (6 ஆண்டுகளில் மக்கள் தொகையில் 69.73%) ஆகும்.[8]

போக்குவரத்து[தொகு]

சந்தேஷ்காளியைக் கடந்து காளிந்தி ஆறு செல்கிறது. சந்தேஷ்காலிக்கு படகில் பயணிக்கப் படகுப் பாதையில் படகுச் சேவை உள்ளது.[9]

கல்வி[தொகு]

சந்தேஷ்காளியில் இராதாராணி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இது இருபாலர் பயிலும் உயர்நிலைப் பள்ளியாகும்.[10] ராஜ்பரி அகர்ஹதி கௌர்ஹரி வித்யாபீட இருபாலர் கல்வி உயர்நிலைப் பள்ளியும் செயல்படுகிறது.

சுகாதாரம்[தொகு]

சந்தேஷ்காளியில் அமைந்துள்ள 25 படுக்கைகள் கொண்ட சந்தேஷ்காளி கிராமப்புற மருத்துவமனை சந்தேஷ்காளி II சிடி பிரிவில் உள்ள முக்கிய மருத்துவ மனையாகும். கொரக்கந்தி மற்றும் ஜீலியாகிளியில் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளன.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census Handbook North Twenty Four Parganas, Census of India 2011, Series 20, Part XII A" (PDF). Page 13. Directorate of Census Operations, West Bengal. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  2. "District Human Development Report: South 24 Parganas". Chapter 9: Sundarbans and the Remote Islanders, p 290-311. Development & Planning Department, Government of West Bengal, 2009. Archived from the original on 5 October 2016. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
  3. "District Statistical Handbook". North 24 Parganas 2013, Tables 2.1, 2.2, 2.4b. Department of Statistics and Programme Implementation, Government of West Bengal. Archived from the original on 2019-01-21. பார்க்கப்பட்ட நாள் 2 May 2018.
  4. "District Census Handbook North Twenty Four Parganas, Census of India 2011, Series 20, Part XII A" (PDF). Map of North Twenty Four Parganas with CD Block HQs and Police Stations (on the fifth page). Directorate of Census Operations, West Bengal. பார்க்கப்பட்ட நாள் 2 May 2018.
  5. "North 24 Parganas Dist. Police". Know Your Police Station. District Police. பார்க்கப்பட்ட நாள் 6 May 2018.
  6. "District Census Handbook North Twenty Four Parganas, Census of India 2011, Series 20, Part XII A" (PDF). Map of North Twenty Four Parganas with CD Block HQs and Police Stations (on the fifth page). Directorate of Census Operations, West Bengal. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
  7. "District Census Handbook North Twenty Four Parganas, Census of India 2011, Series 20, Part XII A" (PDF). Page 657. Directorate of Census Operations, West Bengal. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  8. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)". West Bengal – District-wise CD Blocks. Registrar General and Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
  9. Google maps
  10. "Sandeshkhali Radharani High School". Target Study. பார்க்கப்பட்ட நாள் 19 May 2018.
  11. "Health & Family Welfare Department". Health Statistics. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தேஷ்காளி&oldid=3891522" இலிருந்து மீள்விக்கப்பட்டது