சங்கீதா திங்க்ரா சேகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கீதா திங்க்ரா சேகல்
நீதிபதி-தில்லி உயர் நீதிமன்றம்
பதவியில்
15 திசம்பர் 2014 – 30 மே 2020
பரிந்துரைப்புஎச். எல். தத்து
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சூன் 1958 (1958-06-20) (அகவை 65)
சண்டிகர், இந்தியா
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்

சங்கீதா திங்க்ரா சேகல் (Sangita Dhingra Sehgal-பிறப்பு: 20 சூன் 1958) ஓர் இந்தியச் சட்ட நிபுணர். இவர் 15 திசம்பர் 2014 முதல் தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவர் 21 மே 2020 அன்று பதவி விலகினார்.

பணி[தொகு]

சங்கீதா, சண்டிகரில் 20 சூன் 1958இல் பிறந்தார். சண்டிகரில் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியினை முடித்தார். 1981ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். இவர் 26 சூலை 1985-இல் தில்லி நீதித்துறை பணியில் சேர்ந்தார். 2000 முதல் 2003 வரை கூடுதல் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றினார். 2003 முதல் 2004 வரை இந்தியப் பத்திரிகையாளர் மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார். இவர் ஏப்ரல் 2013 முதல் திசம்பர் 2014 வரை தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் இருந்தார். சங்கீதா 15 திசம்பர் 2014 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். 2 சூன் 2016 அன்று நிரந்தர நீதிபதியானார். மேலும் 21 மே 2020 அன்று நீதிபதி பதவியிலிருந்து விலகி தில்லி மாநில நுகர்வோர் மன்ற குறைதீர் ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_திங்க்ரா_சேகல்&oldid=3894804" இலிருந்து மீள்விக்கப்பட்டது