உள்ளடக்கத்துக்குச் செல்

க. சுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. சுப்பு (K. Suppu) ஓர் தமிழக அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமாவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாணவர்தலைவராக துவங்கிய சுப்பு அக்கட்சியின் சார்பில் 1971ஆம் ஆண்டு இராசபாளையத்திலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2] பின்னர் தி.மு.கவில் இணைந்து 1977ஆம் ஆண்டில் வில்லிவாக்கத்திலிருந்து வெற்றி பெற்றார்.[3] சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினராக கடும் வாதங்களை முன்வைத்ததால் பரவலாக அறியப்பட்டார். அக்கட்சியிலிருந்து காங்கிரசு கட்சிக்கு மாறிய சுப்பு 1991ஆம் ஆண்டில் அக்கட்சியின் வேட்பாளராக சென்னைத் துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் மு. கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.[4] 2001ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்து பின்னர் 2007ஆம் ஆண்டு திமுகவிற்கே திரும்பினார்.[5]

உடல்நிலைக்காரணமாக தமது 70வது அகவையில் அக்டோபர் 29,2011 அன்று இயற்கை எய்தினார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
  2. Mr.K.Suppu., Ex.MLA, Founder of Veerapandia Panpattu Kazlagam[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Tamil Nadu Assembly Election 1977
  4. Chennai Harbour (State Assembly Constituency)1991 Election results
  5. திமுக முன்னாள் எம்எல்ஏ க சுப்பு மரணம் சென்னை ஆன்லைன்
  6. "DMK's 'Idi' K. Suppu no more, The Hindu". Archived from the original on 2011-10-31. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.


"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சுப்பு&oldid=3943362" இலிருந்து மீள்விக்கப்பட்டது