கேரள கர்சகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளா கர்சகன் (Kerala Karshakan) என்பது இந்தியாவின் கேரள அரசாங்க பண்ணை தகவல் பணியகம் வெளியிட்ட ஒரு மாதாந்திர பண்ணை இதழ் ஆகும்.[1] இவ்விதழ் 1954 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் வெளியிட்ட இந்திய விவசாயம் என்ற இதழிற்குப் பிறகு கேரளா கர்சகன் இந்தியாவின் இரண்டாவது பழமையான பண்ணை இதழ் ஆகும். கேரள மாநிலத்தின் முன்னாள் வேளாண் இயக்குநராகவும், கேரளாவின் பண்ணை தகவல் பணியகத்தின் முதல் முதன்மை தகவல் அதிகாரியாகவும் இருந்த ஆர். ஆலி இதழின் முழுநேர ஆசிரியராகப் பணியாற்றினார்.[3]

2013 ஆம் ஆண்டு சூன் மாதம், பண்ணை தகவல் பணியகம் கேரளா கர்சகனின் மின் இதழ் பதிப்பை அறிமுகப்படுத்தியது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Farm Information Bureau wins prize". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Farm-Information-Bureau-wins-prize/article16605335.ece. 
  2. "Pinarayi Vijayan to inaugurate 50th anniversary fete of FIB". The Hindu. 2019-11-19. பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
  3. "At 60, 'Kerala Karshakan' continues to sow inspiration". The Hindu. http://www.thehindu.com/news/cities/Kochi/at-60-kerala-karshakan-continues-to-sow-inspiration/article6393972.ece. 
  4. "Kerala's first agricultural e-journal Kerala Karshakan released". Specttrum News இம் மூலத்தில் இருந்து 2 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170902180347/http://www.specttrumnews.com/news/1311-keralas-first-agricultural-e-journal-released.aspx. 
  5. "Kerala farm e-journal ready". Business Line. http://m.thehindubusinessline.com/news/national/kerala-farm-ejournal-ready/article4788071.ece. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_கர்சகன்&oldid=3950192" இலிருந்து மீள்விக்கப்பட்டது