கு. அ. பொம்மன்
கு. அ. பொம்மன் (K. H. Bomman)(பிறப்பு சனவரி 17, 1910) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சார்ந்தவர். இவர், சுதந்திரா கட்சியின் உறுப்பினர் ஆவார். பொம்மன் 1952 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் சுதந்திரா கட்சி வேட்பாளராகக் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.[1]