குவாதம் இ ரசூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாதம் இ ரசூல்
Qadam e Rasool
குவாதம் இ ரசூலின் முக்கிய குவிமாடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்தர்கா சந்தை, கட்டக், ஒடிசா
சமயம்இசுலாம்
மாவட்டம்கட்டக்
நிலைதர்கா

குவாதம் இ ரசூல் (Qadam e Rasool) இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அமைந்துள்ளது. இது ஒடிசாவில் உள்ள முகலாய கட்டிடக்கலையின் ஒரு புனிதத் தலமாகும். குவாதம் ரசூல் வளாகத்தில் ஏராளமான தர்காக்கள், மோட்டி, குவாதம் இ ரசூல் என்ற பெயர்களில் இரண்டு பள்ளிவாசல்கள் , பல கல்வெட்டுகள் உள்ளன.

ஆராய்ச்சியாளர் முகமது யாமின் கூறுகையில், "கட்டிடக்கலைப்படி இது முகலாய காலத்து அழகிய கோயில், ஆனால் ஒடியா பாணியில் கட்டப்பட்ட ஒரு கோயில் கட்டிடம் என்கிறார். எனவே, இதை ஒடிசாவில் உள்ள இந்து-முசுலிம் கட்டிடக்கலையின் கலவையாக கருதப்படுகிறது." [1]

மயானம்[தொகு]

கோயிலின் உள்ளே, ஒரு பெரிய கல்லறை உள்ளது, இதில் சாகீத் பானி, அதாருதீன் முகமது, முகமது மொக்சின், முகம்மது தாகி கான், சயீத் முகமது, பேகம் பதார் உன் நிசா அக்தர், அப்சல்-உல் அமீன், சிக்கந்தர் ஆலம், உசைன் ராபி காந்தி ஆகியவர்களின் உடல்கள் . புதைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் பல பாரசீக கல்வெட்டுகளும் உள்ளன. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Barik, Bibhuti (19 August 2013). "Qadam-e-Rasool to get new look". பார்க்கப்பட்ட நாள் 22 August 2020.
  2. "Qadam-l-Rasool". பார்க்கப்பட்ட நாள் 21 August 2020."Qadam-l-Rasool". Times of India Travel. Retrieved 21 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாதம்_இ_ரசூல்&oldid=3814615" இலிருந்து மீள்விக்கப்பட்டது