குளோரோமெத்தில் மெத்தில் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குளோரோமெத்தில் மெத்தில் சல்பைடு (Chloromethyl methyl sulfide) என்பது ClCH2SCH3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். செயல்பாட்டுக் குழுக்களின் அடிப்படையில், கரிமகந்தகச் சேர்மமான இது ஒரு தயோயீத்தராக கருதப்படுகிறது. ஓர் ஆல்கைல் குளோரைடாகவும் அறியப்படும் இச்சேர்மம் கந்தகக்கடுகின் கட்டமைப்புடன் தொடர்புடையதாக உள்ளது. அதாவது இச்சேர்மம் ஓர் அபாயகரமான ஆல்கைலேற்றும் முகவராகச் செயல்படுகிறது. குளோரோமெத்தில் மெத்தில் சல்பைடு சேர்மம் கரிம வேதியியலில் பாதுகாக்கும் குழுவாக சில பயன்பாடுகளை கொண்டுள்ளது. காரத்தின் முன்னிலையில் இது கார்பாக்சிலிக் அமிலங்களை (RCO2H) எசுத்தர்களாக (RCO2CH2SCH3) மாற்றுகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

இருமெத்தில்சல்பைடுடன் சல்பியூரைல் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்தால் குளோரோமெத்தில் மெத்தில் சல்பைடு உருவாகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tsai, Yeun-Min (2001). "Chloromethyl Methyl Sulfide". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rc119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.
  2. Bordwell, F. G.; Pitt, Burnett M. (1955). "The Formation of α-Chloro Sulfides from Sulfides and from Sulfoxides". Journal of the American Chemical Society 77 (3): 572–577. doi:10.1021/ja01608a016.