உள்ளடக்கத்துக்குச் செல்

குறைத்துடிப்பு இதயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறைத்துடிப்பு இதயம்
Bradycardia
ஒத்தசொற்கள்குறைத்துடி இலயமின்மை, குறுமிதயத் துடிப்பு
உணரி II இல் காணப்படும் இதய மேலறைக் கணு குறைத்துடிப்பு, இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 50ஆக உள்ளது.
பலுக்கல்
சிறப்புஇதயவியல்
நிகழும் வீதம்15% (ஆண்கள்), 7% (பெண்கள்)

குறைத்துடிப்பு இதயம் (bradycardia) ஒருவரின் ஓய்வு இதயத் துடிப்பு வழமையாக நிமிடத்திற்கு ஆணிற்கு 60க்கு கீழாகவும் பெண்களுக்கு 50க்கு கீழாகவும் உள்ளதைக் குறிக்கிறது.[1] குறைத்துடிப்பு நிமிடத்திற்கு 40 வரை எந்தவொரு நோயறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. சோர்வு, பலவீனம், தலைசுற்றல், வேர்த்தல் ஆகியன நோயறிகுறியாக உள்ளன; மிகக் குறைவான இதயத்துடிப்பு இருக்கையில் மயக்கமுண்டாகிறது.[2]

மிக்கப் பயிற்சி பெற்ற மெய்வல்லுநர்களின் மெய்வல்லுநர் இதய நோய்த்தொகுதியில் மிகக் குறைவான இதயத் துடிப்பு ஏற்படுகின்றது. இது ஓர் விளையாட்டுக்கேற்ற ஒத்தமைதல் ஆகும். இதனால் பயிற்சியின் போது இதயத் துடிப்பு மிகைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.[3]

இதயத் தடிப்பு நிமிடத்திற்கு 60க்கு கீழே இல்லாவிடினும் ஒருவரின் தற்போதைய மருத்துவ நிலையில் மிகக் குறைவானதாக கருதப்படும் இதயத் துடிப்பு "சார்பு குறைத்துடிப்பு" என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Types of Arrhythmia". 1 July 2011. Archived from the original on 7 June 2015. பார்க்கப்பட்ட நாள் 19 March 2015.
  2. Sinus Bradycardia – eMedicine
  3. Baggish, Aaron L.; Wood, Malissa J. (2011-06-14). "Athlete's heart and cardiovascular care of the athlete: scientific and clinical update". Circulation 123 (23): 2723–2735. doi:10.1161/CIRCULATIONAHA.110.981571. பன்னாட்டுத் தர தொடர் எண்:1524-4539. பப்மெட்:21670241. 

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைத்துடிப்பு_இதயம்&oldid=3298878" இலிருந்து மீள்விக்கப்பட்டது