உள்ளடக்கத்துக்குச் செல்

குரு சிகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரு சிகரம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மலைச்சிகரம் ஆகும். 5,676 அடி (1722 மீட்டர்) உயரத்தைக் கொண்டுள்ள இது ராஜஸ்தானில் மிகக் கூடிய உயரமான இடமாகும். இது அபு மலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இச் சிகரத்தில் இருந்து அபு மலையினதும், அதன் சுற்றாடலினதும் அழகிய காட்சியைக் காணமுடியும். இதன் உச்சியில் தத்தாத்ரேயர் என்னும் பெயரில் விஷ்ணுவுக்குக் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_சிகரம்&oldid=2466428" இலிருந்து மீள்விக்கப்பட்டது