காரிஸ்ட்டஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரிஸ்ட்டஸ் (Carystus, கிரேக்கம் : Κάρυστος கிரேக்கம்: Κάρυστος‎, நவீன கரிஸ்டோஸ் அருகே ) என்பது பண்டைய யூபோயாவில் இருந்த ஒரு நகர அரசாகும். இது தீவின் தெற்கு கடற்கரையில், ஓச்சே மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது அபாண்டெக்களின் கட்டுப்பாட்டில் இருந்த கப்பல்கள் உள்ள பகுதிகளின் பட்டியலில் இலியட்டில் ஓமரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரம் டிரையோப்சால் நிறுவப்பட்டது என்று துசிடிடீஸ் எழுதுகிறார் . [1] இதன் பெயர் சிரோனின் மகனான காரிஸ்டசிலிருந்து வந்தது. [2]

வரலாறு[தொகு]

பாரசீகப் போர்[தொகு]

காரிஸ்டோசின் வெள்ளிக் காசு, 313-265 கி.மு. முன்பக்கம்: பசுவும் கன்றும். பின்பக்கம்: சேவல்.

கிமு 490 இல் கிரேக்கபாரசீகப் போர்களின் போது தேடிஸ் என்ற பாரசீக தளபதி கரிஸ்டசை முற்றுகையிட்டார். அவர் நகரத்தைச் சுற்றியுள்ள பயிர்களை அழித்து முற்றுகையைத் தொடங்கினார். 80,000 வீரர்களைக் கொண்ட டேட்டிசின் இராணுவம் 200 கப்பல்களுடன் நகரத்தை சுற்றிவளைத்தது. இதனால் கரிஸ்டஸ் சரணடைந்தது . [3] [4]

சலாமிஸ் போருக்குப் பிறகு, தெமிஸ்ட்டோக்ளீஸ் தலைமையிலான ஏதெனியன் கடற்படை நகரத்திலிருந்து பணம் பறித்தது.

அதன்பின்னர் கேரிஸ்டஸ் டெலியன் கூட்டணியில் சேர மறுத்துவிட்டது. ஏதெனியர்கள் காரிஸ்டஸ் டெலியன் கூட்டணியில் சேர வேண்டும் என்று விரும்பினர். ஆனால் இது அதில் இணைய இது மறுத்துவிட்டது. இதன் மறுப்பை ஏற்காத ஏதென்ஸ் கரிஸ்டசை தாக்கிக் கொள்ளையடித்தது. இதனால் காரிஸ்டஸ் டெலியன் கூட்டணியில் வேறுவழியின்றி இணைந்தது. ஏதென்ஸ் இந்த யுக்தியை அவ்வப்போது கையாண்டது. இது கூட்டணியில் உறுப்பினர்களின் எண்ணிக்கைய்யை மேலும் அதிகரிக்க சிறந்த வழி என்று கூறப்பட்டது. இந்த வழியில், எந்த ஒரு கிரேக்க நகர அரசும் பாரசீகத்துடன் சேர்ந்து தங்கள் நகரத்தை அதன் தளமாக பயன்படுத்த முடியாது. மேலும் தங்கள் பங்களிப்பை அளிக்காமல் பாரசீகத்தின் ஆதிக்கமற்ற கிரேக்கத்தின் நன்மைகளைப் பெற முடியாது. டெலியன் கூட்டணியின் உருவாக்கம் ஏதென்சின் ஏகாதிபத்திற்கு வழிவகுத்தது. இது பெலோபொன்னேசியன் போர் ஏற்படக் காரணமாயிற்று. ஏகாதிபத்திய இயல்பானது ஒரு நவீன கூட்டமைப்பைப் உருவாக்க முனைகிறது. இருப்பினும் கூட்டணி உருவாக்கமானது அடிப்படையில் கல்வியறிவற்ற விவசாயப் பின்னணி கொண்ட மக்களுக்கு சட்டமன்றத்தில் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. ஒருங்கிணைக்கப்பட்ட கிரேக்கத்தை உருவாக்க கூட்டணி விரும்பியது. இதில் உள்ள ஒரே சிக்கல் என்னவென்றால், ஒரு நிலையான இராணுவத்தை உருவாக்குவதற்குப் பதிலாக அல்லது கிரேக்கத்தின் மீது பாரசீகத்தின் படையெடுப்பைத் தடுக்க மேம்பட்ட படை பலத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, பெரிக்கிள்சின் வழிகாட்டுதலின் கீழ் ஏதெனியர்கள் பெரிக்லியன் திட்டங்களைத் தொடங்கியது. அது நிதியை வீணடித்து. மேலும் பாரசீகத்தின் தோல்வியில் ஏதென்சையும் கிரேக்கத்தையும் பெருமைப்படுத்தியது. அட்டிகன் நகர அரசுகளில் இருந்து திறை பெறும் இந்த யோசனை எசுபார்த்தாவால் தவறான யோசனையாக நிராகரித்தது. பின்னர் பெலோபொன்னேசியன் போர், கிரேக்கத்தை வெளிப்புற பாரசீக தாக்குதலில் இருந்து பாதுகாக்கவில்லை, ஆனால் கூட்டணியை அதன் உறுப்பினர்களாலேயே நிராகரிக்கும் நிலைக்ககு கொண்டுவந்தது.

மேலும் வரலாறு[தொகு]

லாமியன் போரில் ஏதெனியர்களின் பக்கம் காரிஸ்டியன்கள் போரிட்டனர் . மாசிடோனின் ஐந்தாம் பிலிப்பிற்கு எதிரான போரில் இவர்கள் ரோமானியர்களின் தரப்பை ஆதரித்தனர்.

காரிஸ்டஸ் முக்கியமாக அதன் பளிங்குக்காக விரும்பப்பட்டது. இது ரோமில் மிகவும் வேண்டிய பொருளாக இருந்தது. இசுட்ராபோ பளிங்குச் சுரங்கங்களை அட்டிகாவில் உள்ள ஹாலே அராபெனிடெஸுக்கு எதிரே, காரிஸ்டசுக்கு அருகில் உள்ள கடற்கரையில் உள்ள மர்மரியத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் சுரங்கங்களின் அடையாளங்கள் ஓச்சே மலையில் காணப்படுகின்றன. அங்கு ஏழு முழு தூண்களும், அவை வெட்டபட்ட சுரங்கங்கள் கடலில் இருந்து மூன்று மைல் தொலைவிலும் காணப்படுகின்றன. காரிஸ்டசில் கல்நார் கனிமமும் எடுக்கப்பட்டது. இது காரிஸ்டியன் கல் என்று அழைக்கப்பட்டது. [5] [6]

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

  • ஆன்டிகோனஸ் (கிமு 3 ஆம் நூற்றாண்டு), எழுத்தாளர்
  • அப்போலோடோரஸ் (கிமு 3 ஆம் நூற்றாண்டு), நகைச்சுவை நாடக ஆசிரியர்
  • டியோகிள்ஸ் (கிமு 4 ஆம் நூற்றாண்டு), மருத்துவர்
  • கிளாக்கஸ் (கிமு 6 ஆம் நூற்றாண்டு), குத்துச்சண்டை வீரர்

குறிப்புகள்[தொகு]

  1. Scymn. 576.
  2. Eustath. ad Hom. 2.539
  3. Green, Peter (1996). The Greco-Persian Wars. California: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-052-091-706-4.
  4. Shirley, Samuel (2003). On the War for Greek Freedom: Selections from The Histories. Hackett Publishing Company, Incorporated. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-160-384-679-0.
  5. λίθος Καρύστιος, Plutarch de Def. Orac. p. 707; Apoll. Dysc. Hist. Mirab. 36.
  6. வார்ப்புரு:Cite Strabo
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரிஸ்ட்டஸ்&oldid=3759223" இலிருந்து மீள்விக்கப்பட்டது