கட்டம் கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2×2 பலகையில் கட்டம் கட்டு விளையாட்டு

கட்டம் கட்டு, எனப்படும் விளையாட்டு பலர் விளையாடக்கூடிய விளையாட்டாகும். இதை புள்ளிகளும் கட்டங்களும், நான்கு புள்ளி விளையாட்டு என்றவாறும் அழைப்பர். இதை காகிதத்தாளில் கூட விளையாடலாம். விளையாடுவோரின் விருப்பம்போல் வரிசைகளை அமைத்து, ஒவ்வொரு வரிசையிலும், விரும்பிய எண்ணிக்கையிலான புள்ளிகளை சம இடம்விட்டு வரைய வேண்டும்.

ஒவ்வொருவராக இரு புள்ளிகளை இணைக்க வேண்டும். அடுத்தடுத்து உள்ள இரு புள்ளிகளை மட்டுமே கோடிட்டு இணைக்க வேண்டும். கோடு நேர்க்கோடாகவோ, படுக்கைக்கோடாகவோ இருக்க வேண்டும். குறுக்குகோட்டால் இணைக்கவே கூடாது. சதுரம் அமைக்க தேவையான நான்கு புள்ளிகளில் ஏற்கனவே மூன்று கோடுகள் இணைக்கப்பட்டிருந்தால், நான்காவது கோட்டை வரைந்து சதுரத்தின் உள்ளே தன் குறியீட்டை வரைந்து கொள்ளலாம். தாளில் எல்லா புள்ளிகளும் அருகிலுள்ள புள்ளிகளோடு இணைக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் சதுரங்கள் உருவானவுடன் ஆட்டம் முடிவடையும். யார் அதிக சதுரங்களில் தன் குறியீட்டை வரைந்துள்ளாரோ அவரே வெற்றியாளர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான இடங்களில் கோடிட்டு கொண்டே வருவர். சிலர் உத்தியை கையாண்டு, அடுத்தடுத்து கோடுகளை இட்டு, சங்கிலி போல அமைத்து, அதிக சதுரங்களை பெற திட்டம் வகுப்பர். எதிராளி ஒரு கோடிட்டவுடன் அத்தனை சதுரங்களையும் தனதாக்கி கொள்வார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. West, Julian (1996), "Championship-Level Play of Dots-and-Boxes" (PDF), in Nowakowski, Richard (ed.), Games of No Chance, Berkeley: MSRI Publications, pp. 79–84
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டம்_கட்டு&oldid=3848699" இலிருந்து மீள்விக்கப்பட்டது