உள்ளடக்கத்துக்குச் செல்

கடல் கொவிஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னார் வளைகுடாவில் உள்ள தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது கடல் கொவிஞ்சிகள் (tubefish) ஆகும். இந்தியாவில் மன்னார் வளைகுடா பகுதியில் தான் இவை அதிகம் உள்ளன.

இதிலும் 12 வகைகள் உள்ளன. மீன் இனத்தை சேர்ந்த இவை கடல் குதிரையின் ரகமாகும். இவற்றின் முக அமைப்பு கடல் குதிரை போல இருப்பதால் அதன் ரகத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் இரண்டு தாடைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதால் உணவுகளை உறிஞ்சி உண்ணும் தன்மை கொண்டது. பவள பாறைகள், கடல்புற்கள் மத்தியில் வசிக்கும் இவைகள், அங்குள்ள கழிவுகள், மிதவை உயிரினங்களை உண்டு வாழ்கின்றன.

கடல்குதிரை ரகத்தை சேர்ந்திருந்தாலும் படுக்கை வசமாக மீன்களை போல நீந்தி செல்லும். மன்னார் வளைகுடாவில் இந்த உயிரினத்தை பிடித்தால் , வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தில் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபாரம் என கடுமையான தண்டனைகள் உள்ளன. தெற்காசிய நாடுகளில் இதை ஆண்மை ஊக்கியாக கருதி பொடியாக்கி "சூப்' வைத்து குடித்து வருகின்றனர். நல்ல விலை கிடைக்கும் என்பதால் இந்த இனம் தடையை மீறி தொடர்ந்து கடத்தப்படுகிறது. உடல் முழுவதும் எலும்புகளால் ஆன இவற்றை காய வைத்து கருவாடாக மாற்றுகின்றனர். தசைகள் இல்லாததால் கருவாடாக ஆன பிறகும் உருவம் மாறுவதில்லை. வெளிநாடுகளுக்கும் அதிகம் ஏற்றுமதியாகிறது. இதனால் இவற்றின் அழிவு தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது.

பேரினங்கள்[தொகு]

துணைக் குடும்பம் சிங்னாதினே (கடல் கொவிஞ்சி மற்றும் கடற்பாசிகள்)[1]

  • சென்ரோனுரா காப், 1853
  • ஆம்பெலிக்டுரசு பார், 1930
  • அனார்கோப்டெரசு கப்சு 1935
  • ஆப்டெரிகோகாம்பசு வெபர், 1913
  • பனோதியா கோரா 1926
  • பிரைக்ஸ் ஹெரால்ட், 1940
  • பல்போனரிகசு கெரால்ட், 1953
  • கேம்பிச்சிசு விட்லி, 1931
  • சோரோயிச்திசு காப், 1856
  • கோரிதோய்ச்திசு காப், 1853
  • காசுமோகாம்பசு டாசன், 1979
  • டோரிச்திஸ் காப், 1853
  • டோரிராம்பசு காப், 1856
  • டன்கெரோகாம்பசு விட்லி, 1933
  • என்னேகாம்பசு டாசன், 1981
  • என்டெலுரசு டுமெரில், 1870
  • ஃபெஸ்டுகலெக்ஸ் விட்லி, 1931
  • ஃபிலிகாம்பஸ் விட்லி, 1948
  • ஹாலிகாம்பசு காப், 1856
  • காலிச்திசு கிரே, 1859
  • கெரால்டியா பாக்சுடன், 1975
  • கிப்பிச்திசு பிளீக்கர், 1849-ஆற்றுக் கொவிஞ்சி மீன்கள்
  • கிசுடியோகாம்பெலசு மெக்குல்லோக், 1914
  • கைப்செலோக்நாதசு விட்லி, 1948
  • இக்தியோகாம்பசு காப், 1853
  • இடியோட்ரோபிசிசு வைட்லி, 1947
  • கௌபசு விட்லி, 1951
  • கிம்ப்ளேயஸ் டாசன், 1980
  • கியோனெமிக்திசு கோமன், 2007
  • லெப்டோயிச்திசு காப், 1853
  • லெப்டோனோடசு காப், 1853
  • லிசோகாம்பசு வெயிட் மற்றும் ஹேல், 1921
  • மரபு மரூப்ரா விட்லி, 1948
  • †மரூபிரிக்திஸ் பாரின், 1992 (ரஷ்யாவின் ஒலிகோசீன்)[2]
  • மைக்ரோக்னாதஸ் டன்கர், 1912
  • மைக்ரோபிசு காப், 1853-நன்னீர் குழாய் மீன்கள்
  • மினிச்திஸ் கெரால்ட் மற்றும் ராண்டால், 1972
  • மிட்டோடிச்திசு விட்லி, 1948
  • நான்னோகாம்பஸ் குந்தர், 1870
  • †நேபிகாஸ்ட்ரோசிங்னாதசு பாரிசாட், 1993 (பிரான்சின் ஒலிகோசீன்)[2]
  • நெரோஃபிஸ் ரபினெஸ்க், 1810
  • நோட்டியோகாம்பசு டாசன், 1979
  • பெனெட்டோடெரிக்சு லுனெல், 1881
  • போக்சோகாம்பசு டாசன், 1977
  • பைகோடுரஸ் கில், 1896-இலை கடல் வேதாளம்
  • பிலோப்டெரிக்சு சுவைன்சன், 1839-கடல் வேதாளம்
  • சூடோபாலசு கெரால்ட், 1940-ஃப்ளூவியல் கடல் கொவிஞ்சி
  • புக்னாசோ விட்லி, 1948
  • சியோகுனிச்திசு கெரால்ட் இனம், 1953
  • சோலெக்னாதசு சுவைன்சன், 1839
  • இசுடிக்மடோபோரா காப், 1853
  • இசுடிபெகாம்பசு விட்லி, 1948
  • சிங்னாத்தாய்ட்சு பிளீக்கர், 1851
  • சிங்னாதஸ் லின்னேயசு, 1758
  • ட்ரச்சிராம்பசு காப், 1853
  • யூரோகாம்பசு குந்தர் இனம், 1870
  • வனகாம்பசு விட்லி, 1951

மேற்கோள்கள்[தொகு]

  1. Bailly N, ed. (2015). "Syngnathinae Bonaparte, 1831". FishBase. World Register of Marine Species
  2. 2.0 2.1 "PBDB Taxon". paleobiodb.org. பார்க்கப்பட்ட நாள் 2024-04-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_கொவிஞ்சி&oldid=3986546" இலிருந்து மீள்விக்கப்பட்டது