உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கா சரண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராய் பகதூர் கங்கா சரண் (Rai Bahadur Ganga Saran) பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப்பைச் சேர்ந்த ஓர் இந்து தொழிற்சங்கவாதியாவார்.

1946 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் மாகாண சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் வர்த்தக மற்றும் தொழிலாளர் சங்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி அல்லாத இடத்திலிருந்து கங்கா சரண் சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] பின்னர், இந்திய அரசியலமைப்புச் சபையில் பஞ்சாப் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இருபத்தி ஏழு உறுப்பினர்களில் ஒருவராக இவர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் பிரிவினைக்குப் பிறகு, பாக்கித்தானின் அரசியலமைப்புச் சபைக்குச் செல்வதற்காக விலகத் தேர்வு செய்தார்.[3] 1949 ஆம் ஆண்டு சனவரி மாதம் அது கலைக்கப்படும் வரை மேற்கு பஞ்சாபின் மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் தொடர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bangash, Yaqoob Khan (2022-07-04). "Anglo-Indians and the Punjab Partition: Identity, Politics, and the Creation of Pakistan". The Journal of Imperial and Commonwealth History 0 (0): 13. doi:10.1080/03086534.2022.2086202. பன்னாட்டுத் தர தொடர் எண்:0308-6534. 
  2. Government of Punjab. "First Legislative Assembly of Punjab (August 15, 1947 to January 25, 1949)".
  3. "Pakistan". The Commonwealth Relations Office List 1952 (in ஆங்கிலம்). London: Her Majesty's Stationery Office. 1952. p. 171.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_சரண்&oldid=3508777" இலிருந்து மீள்விக்கப்பட்டது