எஸ். என். சுரேந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
௭ஸ். ௭ன். சுரேந்தர்
பிறப்பு௭ஸ். ௭ன். சுரேந்தர்
17 பெப்ரவரி 1953 (1953-02-17) (அகவை 71)
சென்னை, தமிழ் நாடு இந்தியா
இருப்பிடம்சென்னை
பணிபின்னணிப் பாடகர்
பின்னணி பேசுபவர்
நடிகர்
பெற்றோர்௭ஸ். ௭ஸ். நீலகண்டன் (தந்தை)
பிள்ளைகள்பல்லவி, ஹரி பிரசாந்த்[1]
உறவினர்கள்விஜய் (அக்கா மகன்)

௭ஸ். ௭ன் சுரேந்தர் (S. N. Surendar) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகரும், பின்னணிக் குரல் கலைஞருமாவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் 500-இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஒரு தொழில்முறை பின்னணிக்குரல் கலைஞராகவும் உள்ளார். ஏறத்தாழ 600 திரைப்படங்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[2][3][4] அவற்றில் 75-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் மோகனுக்கு பின்னணி பேசியுள்ளார். சுரேந்தர் யாகசாலை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுரேந்தரின் மூத்த மகள் பல்லவி சுரேந்தர் ஒரு பின்னணிப் பாடகராவார். அவர் துபாயில் குடியேறியுள்ளார். சுரேந்தரின் மகன் ஹரி பிரசாந்த் அந்நியன் திரைப்படத்தில் இளம் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்தார்.[1] சுரேந்தர் ஷோபா சந்திரசேகரின் சகோதரர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மைத்துனர், விஜயின் தாய்மாமா.[5]

திரைப்படப் பட்டியல்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் இயக்குநர் குறிப்புகள்
1980 யாகசாலை
1992 நாளைய தீர்ப்பு
1998 உரிமைப் போர் விருந்தினர் தோற்றம்
1998 பிரியமுடன்
1999 நெஞ்சினிலே எஸ். ஏ. சந்திரசேகர்
2007 சென்னை 600028 வெங்கட் பிரபு
2008 அய்யா வழி
2015 திரைப்பட நகரம்
2016 சென்னை 600028 II வெங்கட் பிரபு

பின்னணிக்குரல் கலைஞராக[தொகு]

நடிகர்கள் திரைப்படங்கள் குறிப்புகள்
பிரதாப் போத்தன் நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980) அம்மா (1982) புதுமைப் பெண் (1984) மனைவி ரெடி (1987)


எஸ். பி. பாலசுப்பிரமணியம் பிரியமானவளே திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டுமே பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
ராஜ்குமார் சேதுபதி சூலம் (1980)
அனந்த் நாக் வீரன்
மோகன் சர்மா சலங்கை ஒலி (1983)
ஸ்ரீநாத் இரயில் பயணங்களில் (1981)
மோகன் கிளிஞ்சல்கள் (1981) திரைப்படம் முதற்கொண்டு கிருஷ்ணன் வந்தான் திரைப்படம் வரை (1987) 1981 முதல் 1987 வரை
கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை (1981) பாடும் பறவைகள் (1985)
விஜயகாந்த் சட்டம் ஒரு இருட்டறை (1981) சாட்சி (1983) வெற்றி (1984)

கண்ணன் காதல் ஓவியம் (1982)
ரகுவரன் ஒரு ஓடை நதியாகிறது (1983)
ஆனந்த் பாபு தங்கைக்கோர் கீதம் (1983)
மகேஷ் கொக்கரக்கோ (1983)
சிவன்குமார் வைதேகி காத்திருந்தாள் (1984)
அருண் தங்க மாமா 3டி (1985)
இராஜசேகர் புதிய தீர்ப்பு (1985)
அர்ஜுன் வேசம் (1985)
விஜய் பாபு படிக்காதவன் (1985)
ரகுமான் நிலவே மலரே (1986) வசந்த ராகம் (1986) மீண்டும் மகான் (1987)

நாகார்ஜுனா என் பாடல் உனக்காக (1987)
இராஜா இனி ஒரு சுதந்திரம் (1987) வளையல் சத்தம் (1987
வி. இரவிச்சந்திரன் பருவ ராகம் (1987)
நிழல்கள் ரவி தென்றல் புயலானது (1989)
வெங்கடேஷ் ஜெயித்துக் காட்டுவேன் (1989)
பிரபு ராஜ் ஒரு புதிய கதை (1990)
ஹரிஷ்குமார் நீ சிரித்தால் தீபாவளி (1991)
சுபலேகா சுதாகர் அபூர்வ சக்தி 369 (1991)
ராஜசேகர் செம்பருத்தி (1991)
நீரஜ் இன்னிசை மழை (1992)
சக்தி மனசு (2000)
நெடுமுடி வேணு அந்நியன் (2005)
சந்திர மோகன் ரனம் (2006)
மனமந்தா
விந்து தாரா சிங் ஸ்ரீ ராம ராஜ்யம் (2011) தமிழ்ப் பதிப்பில் மட்டும்

பாடிய சில பாடல்கள்[தொகு]

திரைப்படம் பாடல் உடன் பாடியவர் இசை பாடலாசரியர் குறிப்புகள்
நான் பாடும் பாடல் தேவன் கோவில் தீபம் எஸ். ஜானகி இளையராஜா
ஊமை விழிகள் மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று பி. ௭ஸ். சசிரேகா மனோஜ் கியான் ஆபாவாணன்
ஊமை விழிகள் கண்மணி நில்லு காரணம் சொல்லு பி. ௭ஸ். சசிரேகா மனோஜ் கியான் ஆபாவாணன்
என் ராசாவின் மனசிலே பாரிஜாத பூவே அந்த சித்ரா இளையராஜா
தேவா சின்ன பய சின்ன பொண்ண சித்ரா தேவா

விருதுகள்[தொகு]

  • சுரேந்தர் 1999 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
  • 2005 இல் தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணிக் குரல் கலைஞருக்கான விருதைப் பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Hindu : Entertainment Chennai / Interview : Junior with potential". www.thehindu.com. Archived from the original on 16 September 2015. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  2. 2.0 2.1 Kumar, S. R. Ashok (22 சூலை 2010). "Grill Mill: S. N. Surendar". The Hindu (thehindu) இம் மூலத்தில் இருந்து 6 ஆகத்து 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170806060614/http://www.thehindu.com/features/cinema/Grill-Mill-S.-N.-Surendar/article16206174.ece. பார்த்த நாள்: 2015-01-28. 
  3. "பின்னணிக் குரலால் முன்னணிக்கு வந்த சுரேந்தர்" [Surendar made it big as a dubbing artist]. Thinakaran. 5 October 2019. Archived from the original on 19 August 2020. பார்க்கப்பட்ட நாள் 19 August 2020.
  4. ஆனந்த், பாரதி (30 November 2018). "மோகனுக்காக பேசியிருக்கேன்... ஆனா மோகன் எங்கிட்ட பேசினதே இல்ல! – எஸ்.என்.சுரேந்தர்" [I speak for Mohan... But Mohan has never spoken with me! – S. N. Surendar]. Kamadenu. Archived from the original on 7 March 2019. பார்க்கப்பட்ட நாள் 7 March 2019.
  5. "kollytalk.com". ww38.kollytalk.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-01.

வெளி இணைப்புகள்[தொகு]

பகுப்பு/வாழும் நபர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._என்._சுரேந்தர்&oldid=3990880" இலிருந்து மீள்விக்கப்பட்டது