எலிக்குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிக்குடும்பம்
(முரிடே)
புதைப்படிவ காலம்:மியோசின் ஆரம்பக்காலம் முதல்
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

[மேற்கோள் தேவை]
மர எலி (அப்போடெமசு சில்வாடிகசு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
இல்லிகெர், 1811
மாதிரிப் பேரினம்
மசு
லின்னேயஸ், 1758
துணைக்குடும்பம்
  • தியோமினே
  • ஜெர்பிலினே
  • லீமாகோமினே
  • லோபியோமைனே
  • முரினே
  • †சூடோகிரிசெடோடோன்டினே

எலிக்குடும்பம் அல்லது முரிடே (Muridae) என்பது பாலூட்டி வகுப்பில் உள்ள குடும்பங்கள் யாவற்றினும் மிகப்பெரிய குடும்பம். இக் குடும்பத்தில் ஏறக்குறைய 650 சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா ஆகிய இடங்களில் இயற்கையாக வாழ்கின்றன. எலி இனங்கள் உலகெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு எங்கும் பரவி உள்ளன. சுண்டெலி, வயல் எலிகள், கெர்பில் முதலியவை இந்தக் குடும்பத்தை சேர்ந்த எலி வகைகள் ஆகும். அறிவியற் பெயராகிய முரிடே என்பதன் பொருள் இலத்தீனில் எலி என்பதே. இச்சொல் கிரே என்பவரால் 1825-ல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது[1].

பண்புகள்[தொகு]

எலிக்குடும்பத்து இனங்கள் உருவில் சிறியன. வாலின் நீளத்தைத் தவிர்த்தால் சற்றேறக்குறைய 10 செமீ இருக்கும். இவை 4.5 முதல் 8 செமீ வரையிலான குட்டி ஆப்பிரிக்கச் சுண்டெலி முதல் 48 செமீ வரையிலான பெரிய வெள்ளை பிலிப்பைன் எலிகள் வரை பல வகைப்பட்டன. இவ் எலிகளுள் சிலவற்றுக்கு நீண்ட கால்கள் உள்ளன. இதனால் இவை தாவிக் குதித்து நகரக்கூடியன. எலிகளின் பொதுவான நிறம் பழுப்பு. ஆனால், கறுப்பு, சாம்பல், வெள்ளை நிற எலிகளும் உண்டு. நால்வரி எலி போன்று உடலில் கோடுகள் கொண்ட இனமும் உண்டு. [2].

எலிக் குடும்பத்து இனங்கள் நன்றாக கேட்கும் திறனும், மணம் நுகரும் திறனும் கொண்டவை. பல்வேறு சூழல்களில் வாழ்கின்றன. காடுகளிலும், வயல்வெளிகளிலும், புல்வெளிகளிலும், உயர் மலைகளிலும் வாழ்கின்றன. கெர்பில் போன்ற எலி வகை இனங்கள் நீர் குறைந்த பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. எலி இனங்கள் தாவர உண்ணிகளாகவோ எல்லாம் உண்ணிகளாகவோ உள்ளன. வலுவான தாடை தசைகள் கொண்டுள்ளன. இவற்றின் முன்வெட்டிப்பற்கள் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றின பல் வகையடுக்கு கீழ்க்காணுமாறு குறிக்கப்படும்:

பல் வகையடுக்கு
1.0.0.1-3
1.0.0.1-3

எலிக்குடும்பிகள் ஓராண்டில் பல முறை பல குஞ்சுகள் ஈனுகின்றன. இவை புணர்ந்தபின்னர் 20-40 நாட்களில் குஞ்சுகள் ஈனுகின்றன. ஆனால் இவை இனத்துக்கு இனம் மிகவும் வேறுபடுகின்றன. பிறந்த எலிக்குஞ்சுகள் கண்பார்வை இல்லாமலும், உடலில் மயிர் இல்லாமலும், தன்னைக் காத்துக்கொள்ளும் திறம் இல்லாமலும் பிறக்கின்றன. ஆனால் எல்லா எலி இனங்களும் அப்படி இல்லை, எடுத்துக்காட்டாக முள்ளெலி[2].

படிவளர்ச்சி[தொகு]

பிற சிறிய பாலூட்டிகளைப்போல, எலிக் குடும்பத்தின் படி வளர்ச்சியும் தெளிவாகத் தெரியவில்லை. தொல்லுயிர் படிவங்கள் மிகக் குறைவே. ஆசியாவில் வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள ஆம்சிட்டர் (hamster) போன்ற ஏதோவொரு விலங்கில் இருந்து முன்பகுதி மியோசீன் (Miocene) ஊழிக்காலத்தில் தோன்றியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது. ஓலோசீன் (Holocene) ஊழிக்காலத்தில் மாந்தர்களோடு சேர்ந்து உலகமெல்லாம் பரவியது என நினைக்கின்றார்கள் [3].

உயிரின வகைப்பாடு[தொகு]

எலிக்குடும்பம் (மூரிடுகள், Murids) 4 உட்குடும்பங்களில் (துணைக்குடும்பங்களில்), 140 பேரினங்களாக, மொத்தம் 650 எலி இனங்கள் உள்ளன.

உட்குடும்பம் அல்லது துணைக்குடும்பங்கள்[தொகு]

  • தியோமினே (முள்ளெலி, கம்பிமுடி எலி)
  • ஜெர்பிலினே (கெர்பில்கள், சிர்டு, மணல் எலிகள்)
  • லீமாகோமினே (டோகோ எலி)
  • லோபியோமைனே (கொண்டை எலி)
  • முரினே (ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய எலிகள்)
  • †சூடோகிரிசெடோடோன்டினே

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி, Oxford English Dictionary: "Murid"
  2. 2.0 2.1 Berry, R.J. & Årgren, G. (1984). Macdonald, D. (ed.). The Encyclopedia of Mammals. New York: Facts on File. pp. 658–663 & 674–677. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87196-871-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Savage, RJG, & Long, MR (1986). Mammal Evolution: an illustrated guide. New York: Facts on File. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-1194-X.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிக்குடும்பம்&oldid=3849763" இலிருந்து மீள்விக்கப்பட்டது