ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, ஊத்துக்குளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Panchayat union primary school uthukuli tirupur dt

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி ஒரு அரசுப் பள்ளி. இப்பள்ளி நூறாண்டுகளைக் கடந்துள்ளது. 2010ஆம் ஆண்டின் மாநிலச் சிறந்த பள்ளிக்கான விருது, காமராசர் விருது (பள்ளிக்கல்வித் துறை), மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான இந்தியச் சுடர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது. இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி உண்டு. 6 ஆசிரியர்கள் பணிபுரியும் இப்பள்ளியில் 234 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாதிரிப் பள்ளியாகவும் செயற்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]