உறுதிக்கலவை தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறுதிக்கலவைத் தொழினுட்பம் (Concrete Technology) என்பது கட்டுமானப் பொறியியலோடு தொடர்புடையதாகும். பெரும்பாலான நவீன கட்டுமானங்கள் இந்த உறுதிக்கலவைத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தியே எழுப்பப்படுகின்றன.

விகிதாச்சார கலவை[தொகு]

உறுதிக்கலவை என்பது பைஞ்சுதை (Cement), சிறிதாக உடைக்கப்பட்ட கற்கள் (Coarse Aggregate), மணல் (Fine Aggregate) மற்றும் நீர் ஆகியவற்றின் விகிதாச்சார கலவையாகும். உறுதிக்கலவையை திண்காறை என்று வழங்குவதும் உண்டு.