உதவி பேச்சு:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவான மொழிபெயர்ப்புப் பிழைகள்[தொகு]

அர்ப்பணிக்கப்பட்டது[தொகு]

கோயில் பற்றிய கட்டுரைகளை ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழிபெயர்த்து உருவாக்கும்போது, this temple is dedicated to Lord Shiva என்பதனை 'சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது' என பெரும்பாலானோர் எழுதுகின்றனர். dedicated எனும் சொல்லானது ஆங்கில மொழிநடையில் பயன்படுத்தப்படுகிறது. அதனை அப்படியே மொழிபெயர்த்து எழுதுவது, தமிழ் மொழிக்குரிய நடையன்று. இக்கோயில் சிவன் கோயிலாகும் என்றோ இக்கோயிலின் மூலவர் சிவன் என்றோ நேரடியாக எழுதுவது நன்று. தேவையெனில், சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள கோயில் என எழுதலாம்.