இருபென்சைல் கீட்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபென்சைல் கீட்டோன்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-இருபீனைல்புரோப்பேன்-2-ஒன்
இனங்காட்டிகள்
102-04-5 Y
ChemSpider 21105887 Y
EC number 203-000-0
InChI
  • InChI=1S/C15H14O/c16-15(11-13-7-3-1-4-8-13)12-14-9-5-2-6-10-14/h1-10H,11-12H2 Y
    Key: YFKBXYGUSOXJGS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C15H14O/c16-15(11-13-7-3-1-4-8-13)12-14-9-5-2-6-10-14/h1-10H,11-12H2
    Key: YFKBXYGUSOXJGS-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7593
  • O=C(Cc1ccccc1)Cc2ccccc2
UNII 9Y07G5UDKQ Y
பண்புகள்
C15H14O
வாய்ப்பாட்டு எடை 210.28 g·mol−1
தோற்றம் இளம் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 1.069 கி/செ.மீ3
உருகுநிலை 32 முதல் 34 °C (90 முதல் 93 °F; 305 முதல் 307 K)
கொதிநிலை 330 °C (626 °F; 603 K)
-131.7·10−6செ.மீ3/மோல்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 149.4 °C (300.9 °F; 422.5 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இருபென்சைல் கீட்டோன் (Dibenzyl ketone) C15H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். 1,3-இருபென்சைலசிட்டோன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மையத்திலுள்ள ஒரு கார்பனைல் குழுவுடன் இரண்டு பென்சைல் குழுக்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

இதன் விளைவாக மத்தியிலுள்ள கார்பனைல் கார்பன் அணு மின்னனு கவரியாகவும் அருகிலுள்ள இரண்டு கார்பன் அணுக்களும் சிறிதளவு அணுக்கரு கவரியாகவும் மாறுகின்றன. இந்த காரணத்திற்காக இருபென்சைல் கீட்டோன் அடிக்கடி ஆல்டால் ஒடுக்கவினையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் இருகார்பனைல் சேர்மமான இருபீனைலீத்தேன் டையோனும் காரமும் சேர்ந்து டெட்ராபீனைல்வளையபெண்டாடையீனோன் சேர்மத்தை உருவாக்குகின்றன. இருபென்சைல் கீட்டோனை வகைப்படுத்திய பெருமை உருசிய வேதியியலாளர் வெரா போக்தனோவ்சிகையாவைச் சேரும்.

தயாரிப்பு[தொகு]

பீனைல் அசிட்டிக் அமிலத்தை அசிட்டிக் நீரிலி மற்றும் நீரற்ற பொட்டாசியம் அசிட்டேட்டுடன் சேர்த்து 140 -150 செல்சியசு வெப்பநிலையில் மீள் கொதிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. இக்கலவையை மெதுவாக வடிகட்டி வடிநீர்மமாக அசிட்டிக் அமிலம் பெறப்படுகிறது. கார்பனீராக்சைடு வாயு வினையில் வெளியேறுகிறது. இறுதியில் கிடைக்கும் நீர்மம் இருபென்சைல் கீட்டோனும் சிறுபான்மை மாசுக்களும் கலந்த நீர்மமாக இருக்கும். 200 – 205 செல்சியசு வெப்பநிலைக்கு இக்கலவையை சூடுபடுத்தும் போது பிசினாக்கம் நிகழ்ந்து கீட்டோன் உருவாகும் அளவு குறைகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hurd, Charles D.; Thomas, Charles L. (1936). "Preparation of Dibenzyl Ketone and Phenylacetone". J. Am. Chem. Soc. 58 (7): 1240. doi:10.1021/ja01298a043. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபென்சைல்_கீட்டோன்&oldid=3154241" இலிருந்து மீள்விக்கப்பட்டது