இரிடியம்(IV) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம்(IV) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
37501-24-9
பண்புகள்
IrF4
வாய்ப்பாட்டு எடை 268.2109 கி/மோல்
தோற்றம் அடர்பழுப்பு நிற திண்மம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரிடியம் டையாக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் புளோரைடு, பொட்டாசியம் புளோரைடு, சீசியம் புளோரைடு, கால்சியம் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இரிடியம்(IV) புளோரைடு (Iridium(IV) fluoride) என்பது IrF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அடர் பழுப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது [1]. 1965 ஆம் ஆண்டுக்கு முன் இரிடியம்(IV) புளோரைடு தொடர்புடைய விளக்கங்கள் IrF5 சேர்மத்தைக் குறித்து விளக்குவது போலவே தோன்றுகின்றன [1]. கருப்பு இரிடியத்தை [1], IrF5 உடன் சேர்த்து அல்லது நீர்த்த ஐதரசன் புளோரைடிலுள்ள ஐதரசன் வாயுவுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி [2] இரிடியம்(IV) புளோரைடு திண்மத்தைத் தயாரிக்கிறார்கள். முப்பரிமான அணிக்கோவை படிகக் கட்டமைப்பில் உள்ள ஒரு உலோகடெட்ராபுளோரைடுக்கு இதுவே முதலாவது உதாரணமாகும். இதே கட்டமைப்பில் உள்ள டெட்ராபுளோரைடுகளாக RhF4, PdF4 மற்றும் PtF4 போன்ற சேர்மங்கள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டன [3]. எண்முக வடிவில் ஆறு ஒருங்கிணைவுகள் கொண்ட இரிடியம் இக்கட்டமைப்பில் உள்ளது. எண்முக இரிடியத்தின் இரண்டு விளிம்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டும், இரண்டு புளோரின் அணுக்கள் பகிர்ந்து கொள்ளப்படாமலும் ஒன்றுடன் ஒன்றாக ஒரே பக்கத்தில் அமைந்துள்ளன [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Paine, Robert T.; Asprey, Larned B. (1975). "Reductive syntheses of transition metal fluoride compounds. Synthesis of rhenium, osmium, and iridium pentafluorides and tetrafluorides". Inorg. Chem. 14 (5): 1111–1113. doi:10.1021/ic50147a030. 
  3. 3.0 3.1 Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(IV)_புளோரைடு&oldid=2688217" இலிருந்து மீள்விக்கப்பட்டது