உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டு மகன்கள் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டு மகன்கள் இயேசு தனது போதனைகளின் போது கூறிய ஒரு உவமான கதையாகும். இது மத்தேயு 21:28-32 இல் கூறப்பட்டுள்ளது. இவ்வுவமையை இயேசு ஆலயதுக்குள் போதித்துக் கொண்டிருக்கும் போது தலைமைக் குருக்களும் மக்களின் முப்பர்களும் அவரை அணுகி,"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டபோது அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இயேசு இவ்வுவமையை கூறினார்.[1]

உவமை[தொகு]

ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் முத்தவரிடம் போய்,"மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்" என்றார். அவர் மறுமொழியாக,"நான் போக விரும்பவில்லை" என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக,"நான் போகிறேன் ஐயா." என்றார் ஆனால் போகவில்லை.

பொருள்[தொகு]

முதலில் போகமறுத்து பின் சென்ற புதல்வர் பாவிகளாக இருந்து மனம் மாறியவரை குறிக்கிறது. இவர்கள் முதலில் கடவுளின் சொல்கேளாமல் நடந்தனர் ஆனால் பின்னர் மனம் மாறி கடவுள் சொற்படி நடந்தனர். முதலில் போகிறேன் எனச்சொல்லி பின் போகமலிருந்த புதல்வர், கடவுள் கூறியவற்றை செய்வதாக கூறி வெளிவேடமிட்டவர்களாகும். இவர்கள் விண்ணரசில் இடம் பிடிக்க மாட்டார்கள் எனப்து இவ்வுவமையின் பொருளாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

தமிழ் கிறிஸ்தவ சபை பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம்



மேற்கோள்கள்[தொகு]

  1. Lapide, Cornelius (1889). The great commentary of Cornelius à Lapide. Translated by Thomas Wimberly Mossman. London: John Hodges.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டு_மகன்கள்_உவமை&oldid=3768960" இலிருந்து மீள்விக்கப்பட்டது