இம்மான்ஸ் இ. வயிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்மான்ஸ் இ. வைட்
பிறப்பு1891
இறப்பு1982
பணிகிறிஸ்தவ மதபோதகர்
அறியப்படுவதுதிருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல்
வாழ்க்கைத்
துணை
ரூத் பார்க்கர் வைட் (1895-1989)
பிள்ளைகள்3

இம்மான்ஸ் இ. வைட் (1891–1982) (ஆங்கிலம்: Emmons E. White) இருபதாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ஒரு கிறிஸ்தவ மதபோதகராக இருந்தவர். அவர் தனது தமிழ் இசை பணிக்காகவும் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காகவும் அறியப்படுபவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இம்மான்ஸ் இ. வைட்டின் மனைவி ரூத் பார்க்கர் வைட் (1895–1989). இருவரும் தென்கிழக்கு இந்தியாவில் 1917 முதல் 1957 வரை மதபோதகர்களாகப் பணியாற்றினார்கள். தொழுநோயாளிகளுக்கான ஒரு மருத்துவமனை அமைத்த இவர்கள், தமிழ் இசை, குழந்தைகளின் கல்வி மற்றும் காப்பகங்கள், பஞ்ச நிவாரணம், தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்காகக் கிறிஸ்தவ தேவாலயங்களை அமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்தனர். அவர்களுக்கு லாரா ரூத் (பிறப்பு 1922) என்ற ஒரு மகளும், வில்லியம் ராபின்சன் (பிறப்பு 1928) மற்றும் ஸ்டீபன் (பிறப்பு 1933) என்ற இரு மகன்களும் இருந்தனர். வைட் தம்பதியினர் இரண்டாம் உலகப் போரின் போது அனாதையாக ஆக்கப்பட்ட சகுந்தலா என்ற பெண்ணையும் தங்கள் மகளாகத் தத்தெடுத்தனர்.[1]

இம்மான்ஸ் வைட் 1968-ஆம் ஆண்டு திருக்குறளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறட்பாக்களை செய்யுள் வடிவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தனது "தி விஸ்டம் ஆஃப் இந்தியா" என்ற நூலில் வெளியிட்டார். பின்னர் 1976-இல், "தி விஸ்டம் ஆஃப் தி டமில் பீப்பல்" என்ற தனது மற்றொரு படைப்பில் இம்மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன.[2] வைட் திருக்குறளை "உலகின் மிகச்சிறந்த அற போதனைகளின் தொகுப்பு" என்று கருதினார்.[3]

இயற்றிய படைப்புகள்[தொகு]

இம்மான்ஸ் இ. வைட் கீழ்கண்ட படைப்புக்களை இயற்றியுள்ளார்:[1]

  • Kālakṣēpamum cuvicēsṣap piraccāramum (Tamil) (with V. Jeyaraj and Ṭ. Srinivas Iyengar) (1955)
  • Appreciating India's music: An introduction to the music of India, with suggestions for its use in the churches of India (1957)
  • The wisdom of India (1968)
  • Appreciating India's music: An introduction, with an emphasis on the music of South India (1971)
  • The wisdom of the Tamil people, as illustrated by translated selections from their ancient literature (1975)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "White, Emmons E." WorldCat Identities. WorldCat. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
  2. Manavalan, A. A. (2010). A Compendium of Tirukkural Translations in English (in ஆங்கிலம்). Vol. 4 vols. Chennai: Central Institute of Classical Tamil. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-908000-2-0.
  3. Rajaram, M. (2009). Thirukkural: Pearls of Inspiration. New Delhi: Rupa Publications. pp. xviii–xxi.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்மான்ஸ்_இ._வயிட்&oldid=3299828" இலிருந்து மீள்விக்கப்பட்டது