உள்ளடக்கத்துக்குச் செல்

இப்படை வெல்லும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்படை வெல்லும்
இயக்கம்கௌரவ் நாராயணன்
தயாரிப்புசுபாஸ்கரன் அல்லிராஜா
கதைகௌரவ் நாராயணன்
இசைடி. இமான்
நடிப்புஉதயநிதி ஸ்டாலின்
மஞ்சிமா மோகன்
ஒளிப்பதிவுரிச்சர்டு எம். நாதன்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்.
கலையகம்லைக்கா தயாரிப்பகம்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவிஸ்
வெளியீடு9 நவம்பர் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படை வெல்லும் (Ippadai Vellum) என்பது 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கௌரவ் நாராயணன் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், டேனியல் பாலாஜி, ஆர். கே. சுரேஷ், சூரி ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு 2016 செப்டம்பர் மாதத்தில் தொடங்கியது.[2]

கதைச்சுருக்கம்[தொகு]

சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் மது என்கிற மதுசூதனனும் (உதயநிதி ஸ்டாலின்), காவல் துறை இணை ஆணையரின் தங்கை பார்கவிவியும் (மஞ்சிமா மோகன்) காதலிக்கின்றனர். மதுவின் சம்பளத்தை அடிப்பையாக கொண்டு வீட்டுக்கடன் வாங்கி அனுப்ப, அதைக்கொண்டு சொந்த ஊரான திருவண்ணாமலையில் மதுவின் அம்மா கண்மணி (ராதிகா) வீடுகட்டிவருகிறார். இந்நிலையில் மென்பொருள் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் மதுவின் வேலை போகிறது. அம்மா வருத்தப்படுவார் என்பதால் அதைச் சொல்லாமல் மறைக்கிறார். கந்துவட்டிக்குக் கடன் வாங்கியும், காதலியின் உதவியுடனும் வீட்டுக் கடனுக்கு தவனை செலுத்துகிறார். இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் பார்கவியின் அண்ணனான காவல் துறை அதிகாரி ஆர். கே. சுரேசுக்கு தெரிந்து, பிரச்சினையாகிறது. இதனால், இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர்.


இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் நைனி மத்திய சிறையிலிருந்து, குண்டு வைத்து அங்கிருந்து தப்பிக்கிறார் தீவிரவாதி சோட்டா. அடுத்த குண்டுவெடிப்புக்கான திட்டத்துடன் சென்னைக்கு வருகிறார். அப்போது வழியில் கண்ட சோட்டாவை டப்பிங் கலைஞரான சூரி தன் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று உதவுகிறார். காவலர்கள் வாகன தணிகையில் ஈடுபடுவதைக் கண்ட சோட்டா சூரியின் வண்டியில் இருந்து இறங்கி சென்றுவிடுகிறார். சாலையைக் கடக்கும் சோட்டாவை மகிழுந்தில் வரும் மது இடித்துவிடுகிறார். நேர்ச்சியில் காயமுற்ற சோட்டாவை மது மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணமில்லாததால் சொல்லிக்கொள்ளாமல் சென்றுவிடுகிறார். சோட்டா மருத்துவமனையில் இருந்து மாயமாகிறார். மருத்துமனையில் பணிபுரியும் பெண் தீவிரவாதி சோட்டாவின் படத்தை தொலைக்காட்சி செய்தியில் பார்த்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து காவல்துறையிடம் கூறுகிறார். காவல்துறையினர் மதுவையும், சூரியையும் கண்காணிப்புக் கேமராக்களில் சோட்டாவுடன் இருப்பதைக் கண்டு இருவரையும் சந்தேகப்பட்டு கைது செய்து ஒரே வாகனத்தில் அழைத்துச் செல்லுகிறது. வழியில் காவல்வாகனம் நேர்ச்சிக்கு உள்ளாகிறது. மருத்தவமனையில் இருவரும் சேர்க்கப்படுகின்றனர். அவர்களை இரவிலேயே போலி மோதலில் கொல்ல காவல் துறை அதிகாரி ஆர். கே. சுரேஷ் திட்டமிடுகிறார். இதையறிந்த இருவரும் அவர்களிடம் இருந்து தப்பிச் செல்கின்றனர். காதலி பார்கவியின் துணையுடன் மதுவும், சூரியும் தீவிரவாதிகளுடன் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என நிரூபிப்பதும், காவல்துறையினருடன் சேர்ந்து சென்னையில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து, தீவிரவாதிகளைப் பிடிப்பதுமே மீதிக் கதை

பாடல்கள்[தொகு]

திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மதன் கார்க்கியும் அருண்ராஜா காமராச்ம் எழுதியுள்ளனர்.[3]

விமர்சனம்[தொகு]

விமர்சகர்களிடம் இப்படம் சராசரியான விமர்சனத்தையே பெற்றது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'For once, I don't have to worry about profit'". Cinema Express. 8 November 2017. Archived from the original on 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017. Actors often have one film that they can pinpoint as the one which made all the difference. Udhayanidhi Stalin thinks Ippadai Vellum will be that film. It's an action thriller, but with a love track included to make the script 'commercially viable'.
  2. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-17/udhayanidhi-gaurav-project-titled-as-ippadai-vellum.html
  3. "Ippadai Vellum Songs Download: Ippadai Vellum MP3 Tamil Songs Online Free on". Gaana. Archived from the original on 16 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
  4. "Ippadai Vellum Movie Review : Entertaining to an extent". The Times of India இம் மூலத்தில் இருந்து 1 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230801203435/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/ippadai-vellum/movie-review/61577728.cms?from=mdr. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்படை_வெல்லும்&oldid=3995744" இலிருந்து மீள்விக்கப்பட்டது