இந்திராணி ஐகாத் கியால்ட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திராணி ஐகாத் கியால்ட்சன்
பிறப்பு1952 (1952)
சைபாசா, பீகார், இந்தியா
இறப்பு1994 (அகவை 41–42)
தொழில்நிறுவன கட்டுப்பாடில்லாத எழுத்தாளர்

இந்திராணி ஐகாத் கியால்ட்சன் (1952-1994) இந்தியாவைச் சேர்ந்த நாவலாசிரியரும் கட்டுரையாளருமாவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1952 ஆம் ஆண்டில் பீகாரில் உள்ள சைபாசாவில் வசித்து வந்த உள்ளூர் நிலக்கரிச் சுரங்க உரிமையாளருக்குப் பிறந்ததால் பல்வேறு சலுகைகளோடு வளர்க்கப்பட்டுள்ளார். அவரின் ஊருக்கு அருகிலுள்ள நகரமான ஜாம்ஷெட்பூரில் உள்ள முதன்மையானதும் புகழ்பெற்றதுமான கத்தோலிக்க பள்ளியான லோரெட்டோ உறைவிடப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர்,இந்தியாவை விட்டு வெளியேறி, நியூயார்க் நகரத்தில் உள்ள பர்னார்ட் கல்லூரியில் படிப்பைத் தொடர சென்றுள்ளார்.

தனி வாழ்க்கை[தொகு]

இவருக்கு முதல் திருமணமாகி மிக விரைவிலேயே விவாகரத்து பெற்றுள்ளார். அதற்கு பின்பதாக கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்துள்ளார், அங்கு பல்வேறு ஆண்களால் திருமணத்திற்கு கேட்கப்பட்டாலும் அனைவரையும் வெவ்வேறு காரணங்களால் நிராகரித்துள்ளார். ஒரு இந்திய இராணுவ அதிகாரியை அவர் பேசும் ஆங்கிலத்தின் "பஞ்சாபி உச்சரிப்பு" காரணமாகக் கூட நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில் திபெத்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தேயிலைத் தோட்ட உரிமையாளரை மறுமணம் செய்துகொண்டு, வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் டார்ஜிலிங்கின் உயரமான எஸ்டேட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.[சான்று தேவை]

தம்பதியர் அங்கே ஒரு உணவு விடுதியை நடத்தியுள்ளனர், அங்கிருந்து அவர் மூன்று புதினங்களை எழுதியுள்ளார்:

வீட்டின் மகள்கள்,

கிரேன்-னின் காலை (1993) மற்றும்

என் கையைப் பிடித்துக்கொள், நான் இறந்து கொண்டிருக்கிறேன், இது அவரது தற்கொலைக்குப் பின் வெளியிடப்பட்டது [1] .

குஷ்வந்த் சிங்கின் வழிகாட்டுதல்[தொகு]

பிரபல இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்குக்கு இந்திராணி தொடர்ந்து பல கடிதங்களை எழுதியுள்ளார், அதில் இவரது முதல் புதினத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் அவருக்கு அனுப்பி அதன் விமர்சகத்தை எதிர்பார்த்துள்ளார். குஷ்வந்த்தும் பல இந்திய எழுத்தாளர்களைப் போலவே இந்திராணியின் கடிதங்களுக்குப் பதிலளித்து, அவரை ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பெங்குயின் புக்ஸ் நிறுவனத்தலைவரான டேவிட் டேவிடாரிடம் அவரைப்பற்றி குறிப்பிட்டு புத்தக வெளியீட்டிற்க்கு வழிவகுத்துள்ளார்.

கதைத் திருட்டு[தொகு]

இவரது முதல் புதினத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, அவரது இரண்டாவது புதினமான கிரேன்-னின் காலை என்பது 1956 ஆம் ஆண்டில் இலண்டனில் ஹோடர் & ஸ்டோட்டன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில நாவலாசிரியர் எலிசபெத் காட்ஜ் எழுதிய ரோஸ்மேரி மரம் என்பதிலிருந்து திருடப்பட்ட கதை என்பது தெளிவாகியது,

வாஷிங்டன் போஸ்ட் ஃபாரின் சர்வீஸின் மோலி மூர் என்பவர் "ஐகாத்-கியால்ட்சன் கதையில் ஒரு இந்திய கிராமத்தின் அமைப்பை எழுதியுள்ளார், பெயர்களை மாற்றியுள்ளார் மேலும் மதத்தை இந்துவாக மாற்றியுள்ளார், ஆனால் பெரும்பாலும் கதையை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஒரே மாதிரியாக எழுதியுள்ளார்" என்று எழுதினார். இந்த புதினமான கிரேன்-னின் காலையானது இந்தியாவில் பெங்குயின் புக்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள பாலன்டைன் புக்ஸ் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது, ஆனால் இங்கிலாந்தில் வெளியிடப்படவில்லை. அதற்க்குள் இக்கதை திருட்டு வெளியாகியுள்ளது.

தற்கொலை[தொகு]

தனது கதைத்திருட்டு கண்டுபிடிக்கப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு தனது தந்தையின் மூதாதையர் வீட்டிற்குத் திரும்பி அங்கே இவரது தாய் மற்றும் சகோதரிக்கு எதிராக பல்வேறு சொத்துக்களுக்காக சட்ட ரீதியான சர்ச்சைக்குரிய சண்டையில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவர்களிடமிருந்து விலகியும் இருந்துள்ளார்.

1994 ஆம் ஆண்டில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.[2]

பிரபல இந்திய எழுத்தாளர். குஷ்வந்த் சிங் இவரைப்பற்றி என் வாழ்க்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்னார், மேலும் அப்புத்தகத்தையே இந்திராணிக்கு அர்ப்பணிக்கவும் செய்துள்ளார். [3]

புதினங்கள்[தொகு]

  • வீட்டின் மகள்கள் (1992)
  • கிரேன்-னின் மார்னிங் (1993)
  • என் கையைப் பிடி, நான் இறந்து கொண்டிருக்கிறேன் (தெரியவில்லை)

மேற்கோள்கள்[தொகு]

  1. See: Khushwant Singh, Women and Men in my Life, 1995. As of 2013, the book was not available through such agencies as Amazon.
  2. "இந்தியாவில் ஒரு மர்மமான பாதை".
  3. Khushwant Singh, Women and Men in My Life, 1995