இந்திராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திராஜா
இனம்இந்திய யானை
பால்ஆண் யானை
பிறப்புசுமார் 1980
இந்தியா
Predecessorநடுங்கமுவ இராசா
உரிமையாளர்தலதா மாளிகை

இந்திராஜா (Indiraja) என்பது ஓர் இந்திய யானையாகும்.[1] இந்த யானை, இலங்கையின் கண்டியிலுள்ள தலதா மாளிகை என்ற புத்தரின் புனிதப் பல் வைக்கப்பட்டிருக்கும் பௌத்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சமய ஊர்வலமான எசல பெரகராவில் முக்கிய பெட்டியை பலமுறை ஏந்தி வந்தது.[2] அங்கிருந்த யானைகளில் இது முக்கிய யானையாகும்.[3][4]

வரலாறு[தொகு]

1980 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த [5] இந்த யானை 1987 ஆம் ஆண்டு சூலை மாதம் நடந்த ஒரு விழாவில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியினால் அப்போதைய இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.[6] இந்திராஜா இலங்கைக்கு பரிசளிக்கப்பட்டபோது அதற்கு 6 வயது. [3] இளமையில், இந்திராஜா விளையாட்டாக இருந்தாலும் சாந்தமாக இருந்தது. தலதா மாளிகையில் ஜனராஜாவுக்குப் பிறகு இரண்டாவது மூத்த யானையாக இது இருந்தது.[7]

பெரகரா ஊர்வலம்[தொகு]

2009 ஆம் ஆண்டு பெரகராவின் பிரதான கலசத்தை சுமந்து செல்வதற்கு யானைகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டபோது, 10 நாட்களுக்கு கலசத்தை சுமக்கும் வாய்ப்பு இதற்குக் கிடைத்தது. அன்றிலிருந்து இந்திராஜா 20 ஆண்டுகளுக்கும் மேலாக எசல பெரகராவில் புனிதப் பல்லக்குக் கலசத்தை சுமந்து வந்தது. 2014 ஆம் ஆண்டு, கொடுகொடெல்ல தெரு முனையில், இந்திராஜா மற்றொரு யானையால் தாக்கப்பட்டது. இருப்பினும் கோபம் காட்டாமல் கலசத்தை சுமந்து கொண்டு கோயிலுக்கு நடந்து சென்றது. [8] [9] 2019 ஆகத்து மாதத்தில், முதலாவது கும்பல் எசல பெரகராவின் போது யானை நோய்வாய்ப்பட்டது.[10]

ஆரவாரம்[தொகு]

2004 ஆம் ஆண்டு விஜயன் என்ற யானைப்பாகனை இந்திராஜா திடீரெனத் தாக்கியதில் அவர் இறந்து போனார். இச்சம்பவத்திற்குப் பிறகு, இந்திராஜா மற்றுமொரு தலதா மாளிகை யானையான சிங்கராஜாவுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டது. ஆனாலும் சங்கிலியை உடைத்துக் கொண்டு சிங்கராஜாவை தாக்கியது. பின்னர் இந்திராஜாவிற்கு சில நாட்கள் மயக்கமருந்து அளிக்கப்பட்டது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "This time Vasana-Indiraja-Nedungamuwe Raja will not participate in the procession". sinhala.adaderana.lk. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
  2. "This time there is a problem about the elephant carrying the Tooth Relic in the procession". Gossip Lanka News. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
  3. 3.0 3.1 "Gentle Giants Worthy of Carrying Relic Casket". CeylonToday (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
  4. "Only five elephants suitable to carry relics: DN". dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Indi Raja profile at Kandy Sri Dalada Maligawa Temple of the Tooth in Sri Lanka - Elephant Encyclopedia and Database". elephant.se. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
  6. Lifie.lk (2021-04-19). "Proud elephants carrying the coffin of the Temple of the Tooth". Lifie.LK (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
  7. "Pulasthi Raja gets a royal welcome". ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Indiraja who carried the Tooth Relic most times". lankadeepa.lk (in Sinhala). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "Dalada Maligawa tuskers dislike Indi Raja". பார்க்கப்பட்ட நாள் 2022-03-15 – via PressReader.
  10. "TUSKER INDIRA RAJA'S OF THE SRI DALADA MALIGAWA HAS FALLEN SICK". HiruNews (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
  11. "Tusker continues rampage". sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராஜா&oldid=3954056" இலிருந்து மீள்விக்கப்பட்டது