இட்டெர்பியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டெர்பியம்(III) அயோடைடு
Ytterbium(III) iodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் மூவயோடைடு
இட்டெர்பியம் அயோடைடு
இனங்காட்டிகள்
13813-44-0 Y
ChemSpider 75573
EC number 237-474-5
InChI
  • InChI=1S/3HI.Yb/h3*1H;/q;;;+3/p-3
    Key: LSSJSIMBIIVSTN-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25212330
  • [I-].[I-].[I-].[Yb+3]
பண்புகள்
YbI3
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்[1]
உருகுநிலை 700 °C (1,292 °F; 973 K) சிதைவடையும்[1]
கரையும்[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இட்டெர்பியம்(III) அயோடைடு (Ytterbium(III) iodide) YbI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

30 வளிமண்டல அழுத்தத்தில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் உலோக இட்டெர்பியத்தை அயோடினுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இட்டெர்பியம்(III) அயோடைடு தயாரிக்கலாம்:[3]

2 Yb + 3 I2 → 2 YbI3

இட்டெர்பியம்(III) ஆக்சைடு, இட்டெர்பியம்(III) ஐதராக்சைடு அல்லது இட்டெர்பியம்(III) கார்பனேட்டு ஆகிய சேர்மங்களூம் ஐதரயோடிக் அமிலத்துடன் வினைபுரிந்து நீரிய கரைசலாக இட்டெர்பியம்(III) அயோடைடு உருவாகிறது:

Yb2O3 + 6 HI → 2 YbI3 + 3 H2O
Yb(OH)3 + 3 HI → YbI3 + 3 H2O
Yb2(CO3)3 + 6 HI → 2 YbI3 + 3 H2O + 3 CO2

கரைசலில் இருந்து படிகப்படுத்தப்பட்ட இட்டெர்பியம்(III) அயோடைடு நீரேற்றை அமோனியம் அயோடைடுடன் சேர்த்து சூடுபடுத்தி இதன் நீரற்ற வடிவத்தைப் பெறலாம்:[4]

வினைகள்[தொகு]

இட்டெர்பியம்(III) அயோடைடு சூடுபடுத்தப்பட்டால் சிதைவடைந்து இட்டெர்பியம்(II) அயோடைடு கிடைக்கும்.:[5]

2 YbI3 → 2 YbI2 + I2

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. pp. 4–99.
  2. "Ytterbium iodide (YbI3)". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  3. Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. Preparation and crystal data for lanthanide and actinide triiodides. Inorg. Chem., 1964. 3 (8): 1137-1240
  4. 无机化学丛书 第七卷 钪 稀土元素. 科学出版社. pp 211
  5. G. Jantsch, N. Skalla, H. Jawurek (1931-11-10). "Zur Kenntnis der Halogenide der seltenen Erden. V. Über die Halogenide des Ytterbiums" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 201 (1): 207–220. doi:10.1002/zaac.19312010119. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19312010119. பார்த்த நாள்: 2022-09-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டெர்பியம்(III)_அயோடைடு&oldid=3775352" இலிருந்து மீள்விக்கப்பட்டது