ஆர். கோவிந்தராசன்
ஆர். கோவிந்தராசன் (R. Govindarajan)(பிறப்பு நவம்பர் 23, 1930) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தைச் சார்ந்தவர். கடலூர் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். கோவிந்தராசன், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகக் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
1971 | கடலூர் | திமுக | 35,219 | 49.61 |