அ. இராதிகா சுரேசு
அ. இராதிகா சுரேசு A. Radhika Suresh | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அம்பிகா இராதிகா சுரேசு | ||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
அ. இராதிகா சுரேசு (A. Radhika Suresh) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மேசைப் பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். ஓர் ஒலிம்பியன் ஆகவும் முன்னாள் தேசிய வெற்றியாளராகவும் இவர் அறியப்படுகிறார்.
குடும்பம்[தொகு]
இராதிகா சுரேசு மேசைப்பந்து வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை கே.ஆர்.பிள்ளை தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முன்னாள் மேசைப்பந்து வெற்ரியாளர் ஆவார், மேலும் இவரது மூத்த சகோதரர் ஆர். இராசேசும் முன்னாள் மாநில மேசைப்பந்து வெற்றியாளர் ஆவார். [1]
சாதனைகள்[தொகு]
இவரது சாதனைகள் பின்வருமாறு. [1]
மாநிலம்[தொகு]
- 10 வயதில் கேரள மாநில இளையோர் மேசைப்பந்து வீரர் பட்டத்தை வென்றார்.
தேசிய அளவு[தொகு]
- 1986 ஆம் ஆண்டில் முசாபர்பூரில் தேசிய இளைய இளையோர் பட்டத்தை வென்றார்
- 1989 ஆம் ஆண்டில் இந்தூரில் தேசிய இளையோர் பட்டத்தை வென்றார்
- 1995 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் நடந்த தேசிய மகளிர் பட்டத்தை வென்றார்
- 2015 ஆம் ஆண்டில் கொச்சியில் உள்ள இராசீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 22ஆவது தேசிய மூத்த வீரர்களின் மேசைபந்து போட்டியின் வெற்றியாளராக பெண்கள் ஒற்றையர் பட்டம் [2]
பன்னாட்டு அளவு[தொகு]
- 1991, 1993 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் உலக வெற்றியாளர்
- 1991, 1993 மற்றும் 1995 இல் காமன்வெல்த் வெற்றியாளர்
- 1990, 1992 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் ஆசிய மேசைப்பந்து வெற்றியாளர்
- 1996 அட்லாண்டா ஒலிம்பிக் மேசைப்பந்து போட்டியில் பங்கேற்பு
- 1991 நைரோபி காமன்வெல்த் மேசைபந்து போட்டியில் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.
- 1991 கொழும்பு மற்றும் 1993 டாக்கா தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுகளில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு நிகழ்வுகளை வென்றதன் மூலம் மூன்று தங்கப் பதக்கங்களையும் வென்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
இந்திய எண்ணெய் நிறுவனத்தில் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை நிர்வாகியாக பணியாற்றினார். [1] கடவந்திரா ஒய்எம்சிஏவில் ஓர் அகாடமியையும் நடத்தி வருகிறார். [3] [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Radhika Suresh::Kerala Table Tennis Association". ktta.in. Archived from the original on 24 October 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016."Radhika Suresh::Kerala Table Tennis Association". ktta.in. Archived from the original on 24 October 2016. Retrieved 26 September 2016.
- ↑ "Arup, Ambika triumph". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
- ↑ "Radhika tastes success as coach". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
- ↑ "Then an Aggressive Player, Now a Patient Coach - The New Indian Express". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.