அல்-வக்வாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வக்வாக் தீவின் ராணி, வால்டர்சின் கையெழுத்துப் பிரதி

அல்-வக்வாக் (al-Wakwak) அல்லது அல்-வாக் வாக், வக் அல்-வாக் அல்லது வெறும் வாக் வாக் என்றும் உச்சரிக்கப்படும் இது இடைக்கால அரபு புவியியல் மற்றும் கற்பனை இலக்கியங்களில் ஒரு தீவு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தீவுகளின் பெயராகும்.[1]

நாகரீகங்களுடன் அடையாளம் காணுதல்[தொகு]

இடைக்கால பாரசீக மற்றும் திருக்குர்ஆன் ஆதாரங்களின் கலவையிலிருந்து பெறப்பட்டது. பாதி தாவரங்கள்/அரை விலங்குகள் வாழும் வக்-வாக் என்ற புராண தீவின் விளக்கங்கள் உட்பட, இந்த ஓவியம் பல வடிவங்களில் விலங்குகளின் வாழ்க்கையை உருவாக்கும் தாவரத்தை சித்தரிக்கிறது. 1600 களின் முற்பகுதி, முகலாய இந்தியா, கிளீவ்லேண்ட் கலை அருங்காட்சியகம்[2]

வக்வாக் பொதுவாக வெகு தொலைவில் உள்ள ஒரு தீவு என பல ஆதாரங்களில் குறிப்பிடப்படுகிறது. பிரபலமான வக்-வாக் தீவு சீனக் கடலில் அமைந்துள்ளதாக அரபு பதிப்புகளில் குறிப்பிடப்படுகிறது. முற்றிலும் பெண்கள் மட்டுமே உள்ள இந்தத் தீவை ஒர் பெண் ஆட்சி செய்கிறர். இது பொதுவாக அல்-காசுவினி என்பரின் படைப்பின் அதிசயங்கள் என்ற தனது கையெழுத்துப் பிரதிகளில் ராணியை அவரது பெண் உதவியாளர்களால் சூழப்பட்டிருப்பதைக் காட்டுகிறார்.[3]

இபின் கோர்தாத்பே, தனது சாலைகள் மற்றும் இராச்சியங்கள் என்ற புத்தகத்தில் சீனக் கடலில் அமைந்துள்ள வக்வாக் தீவைப்பற்றி இரண்டு முறை குறிப்பிடுகிறார்:

“சீனாவின் கிழக்கே வக்வாக் நிலங்கள் உள்ளன. அவை தங்கத்தால் நிறைந்தவை. மக்கள் தங்கள் நாய்களுக்கான சங்கிலிகளையும் குரங்குகளுக்கு க்ழுத்துப் பட்டைகளையும் இந்த உலோகத்தால் செய்கிறார்கள். அவர்கள் தங்கத்தால் நெய்யப்பட்ட துணிகளை உற்பத்தி செய்கிறார்கள். சிறந்த கருங்காலி மரம் அங்கு காணப்படுகிறது. வக்வாக்கில் இருந்து தங்கம் மற்றும் கருங்காலி ஏற்றுமதி செய்யப்படுகிறது”.[4]

தோம் பைர்சு என்பவரின் சுமா ஓரியண்டல் என்ற நூலில் சாவக மக்களிடம் பல நல்ல வேட்டை நாய்கள் தங்கம் மற்றும் வெள்ளி கழுத்துப்பட்டையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டது.[5]:176 இது இபின் கோர்தாத்பே வக்வாக் பற்றிய எழுதிய விளக்கத்துடன் பொருந்துகிறது.:176 மைக்கேல் ஜான் டி கோசே ஒரு பெயர்க்காரணம் ஒன்றை வழங்கினார். இது யப்பானுக்கான காண்டோனீசு பெயரை வழங்குவதாக விளக்குகிறது. கேப்ரியல் பெராண்ட் இதை மடகாசுகர், சுமாத்திரா அல்லது இந்தோனேசியாவுடன் அடையாளப்படுத்தினார்.[6]:110

"மக்கள், குலம், பழங்குடி" என்று பொருள்படும் மலகசி வார்த்தையான வகோக், அவாக் - அவாக், "மக்கள், குழுவினர்" என்ற மலாய் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது என்று தாம் ஊகர்வோர்சு வாதிட்டார்.[7] ஆன் குமார், ஊகர்வோர்சுடன் உடன்படுகிறார்.[6] மேலும் வக்வாக்கை இந்தோனேசியா என்று அடையாளப்படுத்துகிறார். மேலும் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் பண்டைய இந்தோனேசிய தாக்குதல் சாத்தியம் என்று வாதிட்டார்.[6]:110

1154 இல் அல்-இத்ரிசியின் உலக வரைபடம். வரைபடத்தின் இடது பக்கத்திற்கு அருகில் தென்கிழக்கில் அல்-வக்வாக் காட்டப்பட்டுள்ளது.

அல்-ராம்கோர்முசியின் பத்தாம் நூற்றாண்டு அரபுக் கணக்கு அஜயிப் அல்-ஹிந்த் ("மார்வெல்ஸ் ஆஃப் இந்தியா"), வக்வாக் அல்லது வாக்வாக் என்று அழைக்கப்படும் மக்கள் ஆப்பிரிக்காவின் மீது கி.பி. 945-946 இல் படையெடுத்ததைக் கூறுகிறது.[6]:110 அநேகமாக சிறீவிஜயத்தின் மலாய் மக்கள் அல்லது மாதரம் இராச்சியத்தின் சாவானியர்களாக இருக்கலாம்.[8]:27[9]:39 அவர்கள் 1000 படகுகளுடன் தங்கனிகா மற்றும் மொசாம்பிக் கடற்கரைக்கு வந்து கான்பாலோ கோட்டையை கைப்பற்ற முயன்றனர். ஆனால் இறுதியில் தோல்வியடைந்தனர். அந்த இடத்தில் அவர்களின் நாட்டிற்கும் சீனாவிற்கும் பொருத்தமான யானைத்தந்தம், ஆமை ஓடுகள், சிறுத்தை தோல்கள் மற்றும் திமிங்கில வாந்தி போன்ற பொருட்கள் இருந்ததே இத்தாக்குதல் நடந்தது. மேலும் அவர்கள் பாண்டு மக்களிடமிருந்து (அரேபியர்களால் செங் அல்லது செஞ் என்று அழைக்கப்பட்டனர்) அடிமைகளை அவர்கள் விரும்பியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.[10] கறுப்பின ஆபிரிக்கர்களின் இருப்பு 15 ஆம் நூற்றாண்டு வரை பழைய சாவகக் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[11][12] மேலும் மிங் வம்சத்தின் காலத்தில் சாவானியர்கள் கறுப்பின அடிமைகளை ஏற்றுமதி செய்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[13][14]

வக்வாக்கில் ஏராளமான் எண்ணிக்கையில் மக்கள் வசிக்கிறார்கள் என்றும், அவர்களில் சிலர் தோற்றத்தில் துருக்கியர்களை ஒத்திருக்கிறார்கள் என்று எழுத்தாளர் அல்-ராம்கோர்முசி கூறுகிறார். மேலும், அவர்கள் அல்லாஹ்வின் அனைத்து படைப்புகளிலும் மிகவும் உழைப்பாளிகள் ஆனால் துரோகம், தந்திரம் மற்றும் பொய் ஆகியவற்றைக் கொண்டிருந்தார்கள் என்றும் கூறுகிறார். [6] :110

வக்வாக் மரம்[தொகு]

அபு எல்-அசன் அல்-இசுபகானியின் வக்வாக் மரம் பற்றிய வரைபடம், அதிசயங்களின் புத்தகம் (14 ஆம் நூற்றாண்டு கையெழுத்துப் பிரதி).

சீனப் பயண எழுத்தாளர் து ஆன் தனது தங்டியான் என்ற நூலில் ஒரு மரம் சிறு குழந்தைகளுடன் வளர்வதாக குறிப்பிடுகிறார்.

அபு எல்-அசன் அல்-இசுபகானியின் அதிசயங்களின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள "ட்ரீ ஆஃப் வக் வாக்" என்ற தலைப்பில் உள்ள ஓவியம் மிகவும் அசாதாரணமானது. ஏனெனில் இது பெண் மரங்களும் எவ்வாறு இனப்பெருக்கம் செய்து தங்களை நிலைநிறுத்துகிறது என்பதை விளக்குகிறது. பெண் உருவங்கள் மரத்திலிருந்து வளர்ந்து, பழங்களாகி முதிர்ச்சியடைந்து தரையில் விழுகின்றன. இதுவே 'வக் வாக்!' என்கிறது. [3]

அல்-அந்தலூசி பதிப்பு அழகான பெண்களை மரத்தின் பழம் என்று குறிப்பிடுகிறது. [7] இது இந்தோனேசியாவின் பத்தாக் மக்களால் பக்குவான் என்று அழைக்கப்படும் பாண்டனசு மற்றும் மடகாசுகரில் வளர்க்கப்படும் பாண்டனசாக இருக்கலாம் என்று மௌனி நினைக்கிறார். அங்கு இது வக்வா என்று அழைக்கப்படுகிறது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Wāḳwāḳ". Encyclopaedia of Islam (Second). (22 August 2013). Ed. P. Bearman. Brill Online. 
  2. "A floral fantasy of animals and birds (Waq-waq)". Cleveland Museum of Art. 2013.
  3. 3.0 3.1 The 'Book of Surprises' (Kitab al-bulhan) of the Bodleian Library.
  4. "Saudi Aramco World : The Seas of Sindbad".
  5. Cortesão, Armando (1944). The Suma oriental of Tomé Pires : an account of the East, from the Red Sea to Japan, written in Malacca and India in 1512–1515 ; and, the book of Francisco Rodrigues, rutter of a voyage in the Red Sea, nautical rules, almanack and maps, written and drawn in the East before 1515 volume I. London: The Hakluyt Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9784000085052. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 Kumar, Ann (2012). 'Dominion Over Palm and Pine: Early Indonesia’s Maritime Reach', in Geoff Wade (ed.), Anthony Reid and the Study of the Southeast Asian Past (Singapore: Institute of Southeast Asian Studies), 101–122.
  7. 7.0 7.1 Saudi Aramco World: The Seas of Sindbad, Paul Lunde.
  8. Lombard, Denys (2005). Nusa Jawa: Silang Budaya, Bagian 2: Jaringan Asia. Jakarta: Gramedia Pustaka Utama. An Indonesian translation of Lombard, Denys (1990). Le carrefour javanais. Essai d'histoire globale (The Javanese Crossroads: Towards a Global History) vol. 2. Paris: Éditions de l'École des Hautes Études en Sciences Sociales.
  9. Nugroho, Irawan Djoko (2011). Majapahit Peradaban Maritim. Suluh Nuswantara Bakti. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-602-9346-00-8.
  10. Wade, Geoff (2012). Anthony Reid and the Study of the Southeast Asian Past. Singapore: Institute of Southeast Asian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9814311960.
  11. Maziyah, Siti (2022). "Analysing the Presence of Enslaved Black People in Ancient Java Society". Journal of Maritime Studies and National Integration 6 (1): 62–69. doi:10.14710/jmsni.v6i1.14010. பன்னாட்டுத் தர தொடர் எண்:2579-9215. 
  12. Jákl, Jiří (2017). "Black Africans on the maritime silk route". Indonesia and the Malay World 45 (133): 334–351. doi:10.1080/13639811.2017.1344050. பன்னாட்டுத் தர தொடர் எண்:1363-9811. http://dx.doi.org/10.1080/13639811.2017.1344050. 
  13. Shu, Yuan, ed. (2017). 中国与南海周边关系史 (History of China's Relations with the South China Sea). Beijing Book Co. Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9787226051870. 一、药材:胡椒、空青、荜拨、番木鳖子、芦荟、闷虫药、没药、荜澄茄、血竭、苏木、大枫子、乌爹泥、金刚子、番红土、肉豆蔻、白豆蔻、藤竭、碗石、黄蜡、阿魏。二、香料:降香、奇南香、檀香、麻滕香、速香、龙脑香、木香、乳香、蔷薇露、黄熟香、安息香、乌香、丁皮(香)。三、珍宝:黄金、宝石、犀角、珍珠、珊瑙、象牙、龟筒、 孔雀尾、翠毛、珊瑚。四、动物:马、西马、红鹦鹉、白鹦鹉、绿鹦鹉、火鸡、白 鹿、白鹤、象、白猴、犀、神鹿(摸)、鹤顶(鸟)、五色鹦鹉、奥里羔兽。五、金 属制品:西洋铁、铁枪、锡、折铁刀、铜鼓。六、布匹:布、油红布、绞布。[4]此 外,爪哇还向明朝输入黑奴、叭喇唬船、爪哇铣、硫黄、瓷釉颜料等。爪哇朝贡贸易 输人物资不仅种类多,而且数虽可观,如洪武十五年(1382年)一次进贡的胡椒就达 七万五千斤。[5]而民间贸易显更大,据葡商Francisco de Sa记载:"万丹、雅加达等港 口每年自漳州有帆船20艘驶来装载3万奎塔尔(quiutai)的胡椒。"1奎塔尔约合59 公斤则当年从爪哇输入中国胡椒达177万公斤。
  14. Nastiti (2003), in Ani Triastanti, 2007, p. 34.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-வக்வாக்&oldid=3868267" இலிருந்து மீள்விக்கப்பட்டது