உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரான், குஜராத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்ரான் (Amran) என்பது முன்னர் அம்ப்ரான் என்று அழைக்கப்பட்ட கிராமம் ஆகும். இந்த கிராமம், இந்தியாவின் குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தின் ஜோடியா தாலுகாவில் உள்ளது.

வரலாறு[தொகு]

இது பிரித்தானிய காலத்தில் இந்த பண்ணைத் தோட்டத்தை சொந்தமாகக் கொண்டிருந்த கவாஸ் குடும்பத்தின் சந்ததியினரின் வசிப்பிடமாகும். [1]

அம்ரான் ஒரு பண்டைய நகரமும் மற்றும் தேவல் ஷா என்று அழைக்கப்படும் ஒரு முஸ்லீம் துறவி அல்லது பைரின் சன்னதி கொண்டதாக கொண்டாடப்படுகிறது. இந்த நபர் குஜராத் சுல்தானிய ஆட்சிப்பகுதியைச் சேர்ந்த சுல்தான் மஹ்மூத் பெகாடாவின் பிரபுக்களில் ஒருவரான மாலிக் மஹ்மூத் குரைசி என்பவரின் மகன். அவரது சொந்த பெயர் மாலிக் அப்துல் லத்தீப், ஆனால் அவர் சுல்தானிடமிருந்து தேவர்-உல்-முல்க் என்ற பட்டத்தைப் பெற்றார். அவர் அம்ப்ரானின் ஃபாஜ்தார் இருந்ததோடு அண்டையில் இருந்த இராஜபுத்திரர்களை அடக்கவும் செய்தார்.1509 ஆம் ஆண்டில் ஒரு இராஜபுத்திரரால் படுகொலை செய்யப்பட்டார். மேலும், அவரது மரணத்திற்குப் பிறகு தேவல் ஷா என்ற பட்டத்தால் புனிதராக அறிவிக்கப்பட்டார். தேவல் என்பது தேவர்-உல்-முல்க் என்ற பட்டம் மருவி வந்தது என்பதில் சந்தேகமில்லை. அவரது கல்லறை இன்றுவரை புனித யாத்திரைக்கான இடமாக உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gazetteer of the Bombay Presidency: Kathiawar (Public Domain text). Vol. VIII. Printed at the Government Central Press, Bombay. 1884. p. 356.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரான்,_குஜராத்&oldid=3095311" இலிருந்து மீள்விக்கப்பட்டது