உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் இருமாலிப்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் இருமாலிப்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ADM
இனங்காட்டிகள்
27546-07-2
பண்புகள்
H8N2Mo2O7
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 2.97 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமோனியம் இருமாலிப்டேட்டு (Ammonium dimolybdate) என்பது NH4)2Mo2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் உள்ள இச்சேர்மம் தண்ணீரில் கரையக்கூடியதாக உள்ளது. தாதுப் பொருட்களில் இருந்து மாலிப்டினம் சேர்மங்கள் தயாரிக்கும் போது இடைநிலைப் பொருளாக அமோனியம் இருமாலிப்டேட்டு உருவாகிறது. தாதுப்பொருட்களை வறுக்கும் போது பண்படா மாலிப்டினம் VI) ஆக்சைடுகள் தோன்றுகின்றன. இவற்றில் இருந்து அமோனியா நீர்க் கரைசல் பிரித்தெடுக்கப்பட்டு அமோனியம் மாலிப்டேட்டு தயாரிக்கப்படுகிறது. அமோனியம் மாலிப்டேட்டு கரைசலை சூடக்குவதால் அமோனியம் இருமாலிப்டேட்டு உருவாகிறது. உருவான அமோனியம் இருமாலிப்டேட்டு திண்மத்தைத் தொடர்ந்து சூடாக்குவதால் இது சிதைவடைந்து மாலிப்டினம் மூவாக்சைடு உருவாகிறது:[1]

(NH4)2Mo2O7 → 2 MoO3 + 2 NH3 + H2O

வேதி அமைப்பைப் பொருத்தவரை, உருக்குலைந்த மாலிப்டினம் மையங்கள் நான்முக வடிவ மாலிப்டினம் மையங்களுடன் இணைந்திருக்கும் பல்பகுதிச் சேர்மமாக அமோனியம் இருமாலிப்டேட்டு காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Roger F. Sebenik et al. "Molybdenum and Molybdenum Compounds" in Ullmann's Encyclopedia of Chemical Technology 2005; Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_655
  2. Armour, A.W.; Drew, M.G.B.; Mitchell, P.C.H. "Crystal and molecular structure and properties of ammonium dimolybdate" Journal of the Chemical Society, Dalton Transactions,1975, p1493-p1496. {{DOI: 10.1039/DT9750001493}}