உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் அறுபுளோரோதைட்டனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் அறுபுளோரோதைட்டனேட்டு
இனங்காட்டிகள்
16962-40-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24852291
  • [NH4+].[NH4+].[F-].[F-].[F-].[F-].[F-].[F-].[Ti+4]
பண்புகள்
F6H8N2Ti
வாய்ப்பாட்டு எடை 197.94 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 1.675கி/செ.மீ3
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அறுபுளோரோசிலிக்கேட்டு
அறுபுளோரோதைட்டனிக் அமிலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமோனியம் அறுபுளோரோதைட்டனேட்டு (Ammonium hexafluorotitanate) (NH4)2[TiF6]. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது நிறமற்றது. அமோனியம் அயனியும் அறுபுளோரோதைட்டனேட்டு ஈரயனியும் இச்சேர்மத்தில் உள்ளன. முக்கிய தாதுவான இல்மனைட்டில் இருந்து தைட்டானியத்தை பிரித்தெடுக்கும்போது இது தோன்றுகிறது. இவ்வினையில் தாது அதிகப்படியான அம்மோனியம் புளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது:[1]

FeTiO3 + 10 NH4F → (NH4)2FeF4 + (NH4)2TiF6 + 6 H2O

இரும்பு அசுத்தங்களை அகற்றிய பிறகு அமோனியாவுடன் கலந்துள்ள அறுபுளோரைடின் நீரிய கரைசலை சூடுபடுத்துவதன் மூலம் நீரேற்ற தைட்டானியம் ஈராக்சைடு மீட்டெடுக்கப்படுகிறது.

(NH4)2TiF6 + 4 NH3 + 2 H2O → TiO2 + 6 NH4F

கட்டமைப்பு[தொகு]

அறுபுளோரோதைட்டனேட்டின் பல உப்புகள் எக்சு கதிர் படிகவியல் ஆய்வின் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. அணிக்கோவையில் [TiF6]2- எண்கோணம் அமோனியம் நேர்மின் அயனிகளுடன் ஐதரசன் பிணைப்புகள் வழியாக இடைவினை புரிகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bichowsky, Foord Von (1957). "Extraction of Titanium(IV) Oxide from Ilmenite". Inorganic Syntheses V: 79–82. doi:10.1002/9780470132364.ch22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132364. 
  2. Tun, Z.; Brown, I. D. (1982). "Hydrogen bonding in Diammonium Hexafluorotitanate". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 38 (6): 1792–1794. doi:10.1107/S0567740882007195.