அபராஜிதா கோபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபராஜிதா கோபி என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2013ல் இவர் அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் மத்தியக் குழு உறுப்பினரானார்.[1] அபராஜிதா கோபி 2009 வரை மேற்கு வங்கத்தில் கட்சியின் செயலக உறுப்பினராக இருந்தார். 2000 வாக்கில் இவர் மாநிலத்தில் கட்சியில் மிக உயர்ந்த பெண்மணியாக இருந்தார். பார்வர்டு பிளாக் கட்சியின் மகளிர் பிரிவான அகில இந்திய அகர்காமி மகிளா சமிதியின் தலைவி ஆவார்.[2] அபராஜிதா கோபி 1977 மற்றும் 1991க்கு இடையில் மேற்கு வங்கத்தின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தர்.

கூச் பெகரில் உள்ள சுனிதி அகாதமியில் மாணவராக இருந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளைக் கொண்டாடும் உரிமைக்கான போராட்டத்தில் மாணவர்களை வழிநடத்தினார்.[3]

கோபி 1972 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் கூச் பெகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். இவர் 19,846 வாக்குகள் (40.07%) பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[4] 1977ஆம் ஆண்டு மீண்டும், சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 32,792 வாக்குகள் (63.07%) பெற்றார்.[5] கோபி 1982-ல் கூச் பெஹார் வடக்கு தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். இம்முறை 46,810 வாக்குகள் (57.15%) பெற்றார். 1987ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 49,172 வாக்குகள் (54.74%) பெற்றார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. All India Forward Block. Central Committee - She was unanimously elected in the 17th Party Congress பரணிடப்பட்டது ஏப்பிரல் 9, 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. All India Agragami Mahila Samity. Central Committee பரணிடப்பட்டது ஏப்பிரல் 9, 2014 at the வந்தவழி இயந்திரம்
  3. The Quarterly Review of Historical Studies. Institute of Historical Studies. 2004. p. 125.
  4. Election Commission of India. Statistical Report on General Election, 1972 to the Legislative Assembly of West Bengal
  5. Election Commission of India. Statistical Report on General Election, 1977 to the Legislative Assembly of West Bengal
  6. Election Commission of India. Statistical Report on General Election, 1982 to the Legislative Assembly of West Bengal
  7. Election Commission of India. Statistical Report on General Election, 1987 to the Legislative Assembly of West Bengal
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபராஜிதா_கோபி&oldid=3672525" இலிருந்து மீள்விக்கப்பட்டது