வீச்சுப் பண்பேற்றம்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/Am2_spec.gif/220px-Am2_spec.gif)
வீச்சுப் பண்பேற்றம் அல்லது வீச்சு மட்டிசைப்பு (Amplitude modulation)(AM) என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது சாதாரண அலைகளை கலந்து இலகுவாக நீண்ட தூரம் கொண்டுசெல்லும் முறைகளில் ஒன்றாகும். வீச்சுப் பண்பேற்றத்திலோ வீச்சு மாறக்கூடியது; அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகளைக் கொண்டு செல்வதில் வீச்சுப் பண்பேற்றம் பயன்படுகின்றது.[1]
![Animation of audio, AM and FM sine waves](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Amfm3-en-de.gif/250px-Amfm3-en-de.gif)
நியம AM அலை குறித்த கணிப்பு முறை[தொகு]
அதிர்வெண் fc ஐயும் வீச்சம் A ஐயும் கொண்ட காவி அலை (sine அலை) ஒன்றைக் கருதுக. அது பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்.
- .
m(t) பண்பேற்றம் பெற்ற அலைவடிவம். இவ் எடுத்துக்காட்டுக்கு சைன் அலை கொண்ட அதிர்வெண் fmபண்பேற்றத்தையும், அது அதை விட மிகச்சிறிய அதிர்வெண் fc எடுத்தால்:
- ,
இங்கு M மட்டிசைப்பின் வீச்சம். M<1 ஆக இருப்பின் (1+m(t)) எப்போதும் நேர்ப் பெறுமானத்தைக் கொள்ளும். எனவே வீச்சுப் பண்பேற்றம் என்பது காவி அலை c(t) ஐ நேர்க் கணியமாயுள்ள (1+m(t)) உடன் பெருக்குவதால் கிடைக்கும்:
மேற்கோள்கள்[தொகு]
- ↑ David B. Rutledge (1999). The Electronics of Radio. Cambridge University Press. p. 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-64645-1.