வாரணாசி பட்டுநெசவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரம்பரிய பனாரசி புடவை தங்க ப்ரோக்கேட் .

பட்டு நெசவு என்பது வாரணாசியில் ஒரு உற்பத்தித் தொழிலாகும். மிகச் சிறந்த பட்டு மற்றும் பனாரசு பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்வதால் வாரணாசி இந்தியா முழுவதும் நன்கு அறியப்படுகிறது.

நெசவு என்பது பொதுவாக வீட்டுத்தொழிலாகச் செய்யப்படுகிறது. வாரணாசியில் பெரும்பாலான நெசவாளர்கள் மோமின் அன்சாரி முஸ்லிம்கள் ஆவார்.[1] வாரணாசியின் முஸ்லிம்களில் பலர் அன்சாரி என்ற பெயரில் நன்கு அறியப்பட்ட ஒரு நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது அரபு மொழியில் அன்சார் என்பதற்கு "உதவி" என்று பொருள். பல தலைமுறைகளாக இவர்கள் தந்தையிடமிருந்து மகனுக்கு தங்கள் கைவினைத்திறனை கடத்திச் சென்றுள்ளனர். அறை அளவிலான காலால்-இயங்கும் தறிகளில் கை-நெசவு பட்டு இவர்கள் நூற்கின்றனர். இவை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அணியும் புடவைகளாக வடிவமைக்கப்படுகின்றன. பல இந்தியப் பெண்கள் தங்கள் திருமண நாளுக்காக வாரணாசி பட்டுச் சேலையை அணிய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.[2] 

வாரணாசி புடவைகள் சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் சரிகை அலங்காரங்களால் ஆனது. இது பாரம்பரிய விழாக்கள் மற்றும் திருமணங்களின் போது பிரபலமாக அணியப்படுகிறது. முன்னதாக, புடவைகளில் பூந்தையல் பெரும்பாலும் தூய தங்கத்தின் இழைகளால் செய்யப்பட்டது. 2009ஆம் ஆண்டில், நெசவாளர் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் இணைந்து பனாரசு பட்டிற்கு புவியியல் சார்ந்த குறியீட்டினைப் பெற்றனர்.[3] இந்த பட்டு குறியீடு பனாரசு பட்டுப் புடவைகளின் உற்பத்திக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பிராந்திய வகை பட்டினைக் கொண்டு இந்த புடவை தயாரிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு நிலவரப்படி வாரணாசியில் சுமார் 40,000 நெசவாளர்கள் உள்ளனர். இது 300,000லிருந்து குறைந்துள்ளது. [4] சேலையின் தேவைக் குறைவும் இறக்குமதி செய்யப்பட்ட புடவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகப் பட்டு உற்பத்தி குறைந்துள்ளது.[5] விசைத்தறி காரணமாகவும் பனாரசு நெசவின் தேவை குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

  • இந்திய துணைக் கண்டத்தில் பட்டு

மேற்கோள்கள்[தொகு]

  1. Gudavarthy, Ajay (2012). Re-framing Democracy and Agency in India: Interrogating Political Society. Anthem Press. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857283504. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
  2. Raman (2012). The Warp and the Weft: Community and Gender Identity Among the Weavers of Banaras. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136518003.
  3. Singh, Binay (18 September 2009). "Banarasi silk sarees get copyright cover" இம் மூலத்தில் இருந்து 29 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120829155022/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-18/india/28088590_1_gi-status-gi-registration-banaras-bunkar-samiti. பார்த்த நாள்: 30 October 2012. 
  4. Das, Mohua (22 August 2015). "Make in India: Reviving textile traditions of Varanasi" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/india/Make-in-India-Reviving-textile-traditions-of-Varanasi/articleshow/48636657.cms. 
  5. "India's traditional crafts: Looming extinction". The Economist. 10 January 2009. https://www.economist.com/asia/2009/01/08/looming-extinction. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரணாசி_பட்டுநெசவு&oldid=3322572" இலிருந்து மீள்விக்கப்பட்டது