வலைவாசல்:தமிழீழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



தொகு  

தமிழீழ வலைவாசல்


தமிழீழம் (Tamil Eelam) எனப்படுவது இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லீம் தேசிய இனங்கள் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும்.

தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.

தமிழீழக் கோரிக்கை 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியினுடைய நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.

தமிழீழம் பற்றி மேலும் அறிய...
தொகு  

சிறப்புக் கட்டுரை


புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சிறார்கள், கனடாவில் நடந்த ஒரு விழாவில்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர், இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழித் தமிழர் எனப்படுவர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொணர்ந்து குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும்பொருட்டே வம்சாவழித் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர்கள், பண்பாடு மற்றும் மொழி அடிப்படையிலாக ஒரே ரீதியாகவிருந்த போதும், சிறு சிறு வேறுபாடுகளின் அடிப்படையில் அவர்களை யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், மன்னார் தமிழர், திருகோணமலை தமிழர், மட்டக்களப்புத் தமிழர், வடமேற்குத் தமிழர், கொழும்புத் தமிழர், வடமத்தியத் தமிழர் என பிரிக்கலாம்.
தொகு  

இதே மாதத்தில்


பிரேமதாசா

தொகு  

செய்திகளில் தமிழீழம்


விக்கிசெய்திகளில் தமிழீழ வலைவாசல்
தொகு  

தமிழீழ நபர்கள்


குமார் பொன்னம்பலம்
குமார் பொன்னம்பலம் ஒர் தமிழ் வக்கீலும் அரசியல்வாதியும் ஆவர். இவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். சந்திரிகா குமாரத்துங்கவிற்கு எதிரான தற்கொலைத்தாக்குதலை அடுத்து இவர் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மகன் இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்ற அரசியலில் இவருக்கு வெற்றிகள் கிட்டாவிட்டாலும், அதற்கு வெளியே இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். இதனால், இனவாதிகள் இவரை வெறுத்தனர். இதன் உச்சக் கட்டமாக அவர்களால் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் இறந்தபோது, விடுதலைப் புலிகள் இவருக்கு மாமனிதர் என்னும் விருது வழங்கிக் கௌரவித்தனர்.

தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • தமிழீழம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|தமிழீழம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • தமிழீழம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • தமிழீழம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • தமிழீழம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • தமிழீழம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

விக்கித்திட்டங்கள்

தொகு  

சிறப்புப் படம்


கருப்பு யூலை கலவரம்
கருப்பு யூலை கலவரம்
படிம உதவி: User:Kalanithe

கருப்பு யூலை கலவரங்களின் போது, இந்தத் தமிழ் இளைஞன் கொல்லப்படுவதற்கு சற்றுமுன்னர் சிங்கள ஒளிப்பட வல்லுனர் சந்திரகுப்த அமரசிங்க எடுத்த ஒளிப்படம்.

தொகு  

தமிழீழம் தொடர்பானவை



தொகு  

பகுப்புகள்


தமிழீழ பகுப்புகள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
வரலாறுவரலாறு
வரலாறு
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழ்நாடு தமிழ் வரலாறு இலங்கை தமிழர்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:தமிழீழம்&oldid=2440602" இலிருந்து மீள்விக்கப்பட்டது