பயனர்:Tshrinivasan/மணல்தொட்டி/yercaudelango

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏற்காடு இளங்கோ
ஏற்காடு இளங்கோ
பிறப்புமார்ச் 19, 1961
ஏற்காடு

ஏற்காடு இளங்கோ (பிறப்பு: மார்ச் 19, 1961) ஓர் எழுத்தாளர். அறிவியல் சார்ந்த பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை பேளுக்குறிச்சியிலும் அறிவியல் இளையர் பட்டவகுப்பை நாமக்கல்லிலும், முதுகலைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலையிலும் முடித்தார். இவருக்கு ஜார்ஜ் டிமிட்ரோவ், ஹோசிமின் என இரு மகன்கள் உள்ளனர்.

பணியும் நூல்களும்[தொகு]

நடுவணரசு தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் இவர் அறுபத்தைந்து அறிவியல் நூல்கள் எழுதி இருக்கிறார். அவை மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகள் நிரம்பியவை.

  • 'பழங்கள்' என்னும் புத்தகம் 'அனைவருக்கும் கல்வி' என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது .
  • ’செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்’ என்ற நூலும் ’அனைவருக்கும் கல்வி’ என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் வழங்கப்பட்டன.
  • 'விண்வெளி ஆயிரம்' 'நீரில் நடக்கலாம்' போன்ற நூல்களையும் கலிலியோ, ஐசக் நியூட்டன், லூயி பாஸ்டர், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் அறிஞர்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

சிறிய அளவிலும் பெரிய அளவிலும் இதுவரை 105 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. 'மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தானா?' என்ற இவருடைய நூல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 11 ஆவது மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்டது[1]


பிற பொதுப் பணிகள்[தொகு]

  • 1987 ஆம் ஆண்டு முதல் அறிவியல் இயக்கத்தில் முனைப்பானவராக உள்ளார். தற்பொழுது சேலம் மாவட்டத் தலைவராக உள்ளார்.
  • மாணவர்களுக்கான மாத இதழ் 'துளிர்' ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.
  • பொதுவிடத்தில் எச்சில் துப்புதல் சுகாதாரக் கேடு என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்கி மூன்று லட்சம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்து பரப்புரை இயக்கம் நடத்தினார்.
  • மைதாவினால் செய்யப்படும் பரோட்டா சாப்பிடுவதால் உடல் நலம் கெடும் என்பதை விளக்கி வருகிறார்.
  • பிளாஸ்டிக் தண்ணீர்ப் புட்டிகளை ஒரு வாரத்திற்கு மேல்பயன்படுத்தல் கூடாது என்று பரப்புரை செய்தார்.
  • ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அறிவொளி இயக்கம் சார்பாக நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார்.
  • மந்திரவாதிகள், போலிச் சாமியார்கள் செய்யும் ஏமாற்று வித்தைகளையும் கடவுள் பெயரைச் சொல்லி பரப்பும் மூடச்செயல்களையும் 'பொய்' என்று அறிவியல் அடிப்படையில் நிரூபித்து வரும் தம் மனைவிக்குத் துணை நிற்கிறார்.
  • மாணவர்களைப் பள்ளிகளில் சந்தித்து வானவியல் பற்றிய அறிவியல் உண்மைகளைச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
  • ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இவர் மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராக விளங்கி வருகிறார்.
  • தம் இறப்பிற்குப் பிறகு தம் உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று தம் விருப்ப ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.
  • பொதுவகத்தில் தாவரவியல் பெயர்களுடனும், அதற்குரிய குறிப்புகளுடனும் பதிவேற்றுகிறார். அப்பதிவேற்றங்களை இத்தொடுப்பில் காணலாம்.
  • 'இந்தியத் தொல் பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட் ' என்ற இவர் எழுதிய நூல் ஏற்காட்டில் ஹோலி டிரினிட்டி சர்ச்சில் உள்ள ராபர்ட் புரூஸ் பூட் அவர்களின் கல்லறையில் 2017 திசம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]