தைட்டானியம்(II) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம்(II) ஆக்சைடு
Titanium(II) oxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
தைட்டானியம் ஓராக்சைடு
இனங்காட்டிகள்
12137-20-1 Y
InChI
  • InChI=1S/O.Ti
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61685
  • O=[Ti]
பண்புகள்
TiO
வாய்ப்பாட்டு எடை 63.866 கி/மோல்
தோற்றம் வெண்கல படிகங்கள்
அடர்த்தி 4.95 கி/செ.மீ3
உருகுநிலை 1,750 °C (3,180 °F; 2,020 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது.
தொடர்புடைய சேர்மங்கள்
தைட்டானியம் ஆக்சைடுகள்
தொடர்புடையவை
தைட்டானியம்(III) ஆக்சைடு
தைட்டானியம்(III,IV) ஆக்சைடு
தைட்டானியம்(IV) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தைட்டானியம்(II) ஆக்சைடு (Titanium(II) oxide) என்பது TiO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை தைட்டானியம் ஈராக்சைடு மற்றும் தைட்டானியம் உலோகத்தை 1500°செல்சியசு வெப்பநிலையில்[1] சேர்த்து தயாரிக்கலாம். TiO0.7 அளவுக்கு TiO1.3 என்ற வீச்சில் சமமற்று விகிதவியலுக்கு ஒவ்வா சேர்மமாக இது காணப்படுகிறது. குறைபாடுள்ள பாறை உப்பு படிகref name = "Wiberg&Holleman"/> அமைப்பில் தைட்டானியம் அல்லது ஆக்சிசனால் ஏற்பட்ட காலியிடத்தால் இந்நிலை தோன்றுகிறது. தூய்மையான தைட்டானியம்(II) ஆக்சைடில் 15% தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் தளங்கள் இரண்டும் காலியிடங்களாக உள்ளன[1]. கவனமாகக் காய்ச்சி குளிரவைக்கும் போது ஒற்றைச்சரிவு படிகம் உற்பத்தியாகி காலியிடங்களை நிரப்புகிறது. இவ்வடிவில் உயர் தடுப்புத் திறனை வெளிப்படுத்தும் மூலசெல்களில் 5 TiO அலகுகள் உள்ளன[2]. உயர் வெப்பநிலை வடிவத்தில் முக்கோணப் பட்டக ஒருங்கிணைப்பு அறியப்படுகிறது. தைட்டானியம்(II) ஆக்சைடின் அமிலக் கரைசல்கள் குறுகிய காலத்திற்கு நிலைப்புத் தன்மையுடன் இருந்து பின்னர் சிதைவடைந்து ஐதரசன் வாயுவைக் கொடுக்கின்றன:[1].

Ti2+ + H+ → Ti3+ + ½ H2

விண்மீன்களிடை[3] ஊடகத்தில் தைட்டானியம்(II) ஆக்சைடின் ஈரணு மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் அறியப்படுகினன. TiO குளிர் (எம் வகை) நட்சத்திரங்களில் ஒளியியல் நிறமாலையில் வலுவான பட்டைகளைக் காட்டுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  2. Electrical and Magnetic Properties of TiO and VO, Banus M. D., Reed T. B., Strauss A. J., Phys. Rev. B 5, 2775 - 2784, (1972)எஆசு:10.1103/PhysRevB.5.2775
  3. Dyck, H. M.; Nordgren, Tyler E. "The effect of TiO absorption on optical and infrared angular diameters of cool stars" Astronomical Journal (2002), 124(1), 541-545. எஆசு:10.1086/341039
  4. http://www.stsci.edu/~inr/ldwarf.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்(II)_ஆக்சைடு&oldid=2052874" இலிருந்து மீள்விக்கப்பட்டது