ஜகதீசு சந்திர மகிந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜகதீசு சந்திர மகிந்திரா
பிறப்பு1892
லூதியானா, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1951
தேசியம்இந்தியன்
பணிமகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் இணை நிறுவனர்

ஜெகதீஷ் சந்திர மகிந்திரா ( Jagdish Chandra Mahindra) பொதுவாக ஜே. சி. மகிந்திரா (சி 1892 – 1951) என அழைக்கப்படும் இவர் இந்தியத் தொழிலதிபரும், மகிந்திரா அண்டு மகிந்திராவின் இணை நிறுவனருமாவார். இவர் கைலாசு சந்திர மகிந்திராவுடனும், மாலிக் குலாம் முகமது ஆகியோருடன் இணைந்து மகிந்திரா நிறுவனத்தை நிறுவினார்.[1][2] இவர் மகிந்திரா குழுமத்தின் தற்போதைய தலைவரான ஆனந்த் மகிந்திராவின் தாத்தா ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

இந்தியாவின் பஞ்சாப்பின் லூதியானாவில் தனது பெற்றோருக்கு ஒன்பது குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையின் இழப்பு குடும்பத்தின் பொறுப்பை இவரது தோள்களில் வைத்தது. இவர் கல்வியின் ஆற்றலை கடுமையாக நம்பினார். மேலும் தனது சகோதர சகோதரிகள் அனைவரும் கடினமாகப் படிப்பதை உறுதி செய்தார். இவர் தனது சகோதரர் கே.சி. மகிந்திராவை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினார்.

இவர் இந்தியாவின் முதன்மை பொறியியல் நிறுவனமும், முதன்மைத் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விக்டோரியா தொழில்நுட்ப நிறுவனத்தில் மும்பை பல்கலைக்கழகம் ) தனது பட்டத்தைப் பெற்றார்.

தொழில்[தொகு]

இவர் டாடா எஃகு நிறுவனத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதில்1929 முதல் 1940 வரை மூத்த விற்பனை மேலாளராக பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது எஃகு தொழில் முக்கியமானதாக இருந்தபோது, இந்திய அரசு இவரை இந்தியாவின் முதல் எஃகு கட்டுப்பாட்டாளராக நியமித்தது.

மகிந்திரா அண்டு மகிந்திரா[தொகு]

இவரும் இவரது சகோதரரும் குலாம் முகமதுவுடன் இணைந்து மகிந்திரா அண்டு முகமது என்ற எஃகு நிறுவனத்தை மும்பையில் தொடங்கினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா சுதந்திரம் பெற்றது. குலாம் முகமது பாக்கித்தானின் முதல் நிதி மந்திரி ஆக பணியாற்ற நிறுவனத்தை விட்டு வெளியேறினார். மகிந்திரா சகோதரர்கள் மும்பையில் வில்லிஸ் ஜீப்புகளை தயாரிக்கத் தொடங்கினர். விரைவில், நிறுவனத்தின் பெயர் மகிந்திரா அண்டு மகிந்திரா என மாற்றப்பட்டது.

இறப்பு[தொகு]

இவர் மாரடைப்பு காரணமாக 1951 இல் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ET Awards 2008-09: Lifetime Achievement Award- Keshub Mahindra". The Economic Times. 25 August 2009. http://economictimes.indiatimes.com/features/et-awards-2008-09-lifetime-achievement-award--keshub-mahindra/articleshow/4930965.cms. 
  2. Herdeck, p. 209
  • Margaret Herdeck; Gita Piramal (1985). "Mahindra". India's Industrialists, Vol. 1. Lynne Rienner Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0894104152.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகதீசு_சந்திர_மகிந்திரா&oldid=3945792" இலிருந்து மீள்விக்கப்பட்டது