சென்னை மத்திய தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 13°04′57″N 80°16′30″E / 13.0825°N 80.2750°E / 13.0825; 80.2750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மத்தி


புரட்சி தலைவர் முனைவர் ம. கோ. இராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே மற்றும் சென்னை புறநகர் இருப்புவழி நிலையம்
சென்னை மத்தியின் முதன்மை நுழைவாயில்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்ம.கோ.இரா. சென்னை மத்தி, சென்னை மத்தி, மெட்ராஸ் மத்தி
அமைவிடம்மாபெரும் மேற்கு வழித்தடம்,
கண்ணப்பர் திடல், பெரியமேடு,
சென்னை, தமிழ் நாடு, 600003
 India
ஆள்கூறுகள்13°04′57″N 80°16′30″E / 13.0825°N 80.2750°E / 13.0825; 80.2750
ஏற்றம்3.465 மீட்டர்கள் (11.37 அடி)
உரிமம்இந்திய அரசு
இயக்குபவர்இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே
தடங்கள்சென்னை–புது தில்லி
சென்னை–ஹவுரா
சென்னை–மும்பை
சென்னை–பெங்களூரு
நடைமேடை17
(12 முதன்மை நிலையம் + 5 சென்னை புறநகர் முனையம்)
இருப்புப் பாதைகள்17
இணைப்புக்கள்மாபோக, புறநகர் தொடருந்து, பெ.வி.க.அ., முனைவர் ம.கோ.இரா. சென்னை மத்திய மெட்ரோ.
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைரோமனெசுக்[1]
தரிப்பிடம்கிடைக்கும்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுMAS
மண்டலம்(கள்) தென்னக தொடருந்து மண்டலம்
கோட்டம்(கள்) சென்னை
வரலாறு
திறக்கப்பட்டது1873; 151 ஆண்டுகளுக்கு முன்னர் (1873)[2]
மறுநிர்மாணம்1959; 65 ஆண்டுகளுக்கு முன்னர் (1959) (முதல்)
1998; 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1998) (இரண்டாவது)
மின்சாரமயம்1931; 93 ஆண்டுகளுக்கு முன்னர் (1931)[3]
முந்தைய பெயர்கள்
  • மெட்ராஸ் மத்தி (1873–1996)
  • சென்னை மத்தி (1996–2019)
பயணிகள்
பயணிகள் ஒரு நாளைக்கு 5,30,000[4] (ஒரு நாளைக்கு 200 தொடர்வண்டிகள் (46 ஜோடி விரைவு/அஞ்சல் தொடர்வண்டிகள் உட்பட)[4])
சேவைகள்
கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டு வழங்கிடங்கள்பயணப்பெட்டி சோதனை அமைப்புதரிப்பிடம்ஊனமுற்ற அணுகல்உணவு அங்காடிகணினிக்கூடாரங்கள்WCவாடகையுந்து நிலையம்பொது போக்குவரத்துMetro interchange
அமைவிடம்
சென்னை மத்தி is located in சென்னை
சென்னை மத்தி
சென்னை மத்தி
சென்னை இல் அமைவிடம்
Map
ஊடாடும் நிலப்படம்
1880ல் பக்கிங்காம் கால்வாயின் மேற்கிலிருந்து சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்
சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம், 1905

சென்னை மத்திய தொடருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமான பெயர்:புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்) என்பது இந்தியாவின், முக்கியமான மற்றும் பெரிய தொடருந்து (இரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம், இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம், இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

வரலாறு[தொகு]

சென்னையின் முதல் தொடருந்து நிலையம் இராயபுரத்தில் பொ.ஊ. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம், பார்க்டவுனில் உருவாக்கப்பட்டது. இந்த இரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. 2019இல், இந்நிலையம் 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சேவைகள்[தொகு]

இத்தொடருந்து நிலையத்திலிருந்து, பிற மாநிலங்களுக்குச் செல்லும் இரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் இரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து இரயில்கள் இயக்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களான கேரளா, கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா செல்லும் இரயில்கள் இங்கிருந்தும், இவ்வழியாகவும், தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, கரூர், சேலம், மதுரை, நாமக்கல், ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் இரயில்கள் இங்கிருந்தும் இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் இரயில்களும் எண்ணூர், கும்மிடிப்பூண்டி மற்றும் அம்பத்தூர், திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னைக் கடற்கரை மார்க்கமாகவும், புறநகர் இரயில்கள் இயக்கப்படுகின்றன.

வசதிகள்[தொகு]

சென்னை மத்திய ரயில் நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளன. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.

சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Origin and development of Southern Railway" (PDF). Shodhganga. p. 6. பார்க்கப்பட்ட நாள் 25 December 2013.
  2. "IR History: Early Days – I". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
  3. "Electric Traction-I". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
  4. 4.0 4.1 Anbuselvan, B. (27 February 2023). "Chennai Central becomes India's first 'silent' railway station" (in en). The New Indian Express. https://www.newindianexpress.com/cities/chennai/2023/Feb/27/chennai-central-becomes-indias-first-silent-railway-station-2551344.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வத் தளம்