சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1792 ஆண்டைய ஒரு ஓவியத்தில் ஒரு இந்து கோயிலும் ஒரு சத்திரமும்.

அகரமுதலிகளில் பல பொருள்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், தற்காலத்தில் சத்திரம் (Choultry) என்பது வழிப்போக்கர்கள் மற்றும் யாத்திரீகர்கள் இளைப்பாறிச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஓர் இடத்தைக் குறிக்கும். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி, சத்திரம் என்பதற்கு அன்னசாலை என்று பொருள் கொடுத்துள்ளது. இதன்படி சத்திரம் என்பது தங்கிச் செல்வதற்கான இட வசதியுடன் வழிப்போக்கர்களுக்கு உணவும் அளித்துப் பசி தீர்க்கும் இடமாகவும் அமைந்தது தெரிகிறது.

முற்காலத்தில் போக்குவரத்து மிக மெதுவாகவே நடைபெற்றது. விலங்குகளால் இழுத்துச் செல்லப்படும் மாட்டு வண்டிகள் போன்றவை பயன்பாட்டில் இருந்தன. பெருமளவில் கால்நடையாகவும் போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டன. ஊர்களுக்கு இடைப்பட்ட சாலைகள் பொதுவாக இரவில் பாதுகாப்பு அற்றவையாகவே இருந்தன. இதனால் தொலை தூரப் பயணிகள் இரவில் தங்கிச் செல்வதற்குப் பாதுகாப்பான இடங்கள் தேவைப்பட்டன. கோடை காலங்களில், பகல் நேரங்களிலும் கூட வழிப்போக்கர்களான மனிதர்கள் மட்டுமன்றி, அவர்கள் பயணம் செய்யும் வண்டிகளை இழுத்துச் செல்லும் விலங்குகளும், இளைப்பாறவும், உணவு, தண்ணீர் முதலியன பெற்றுக்கொள்வதற்கும் வேண்டிய தேவையும் இருந்தது.

மிகப் பழைய காலத்தில் இருந்தே மன்னர்களும், செல்வர்களும், வேறுபலரும் சத்திரங்கள் அமைப்பதை ஒரு சிறந்த அறப்பணியாகக் கருதி முக்கியமான இடங்களில் சத்திரங்களை அமைத்து வந்தனர்.

தமிழ்நாட்டுச் சத்திரங்கள் சில[தொகு]

  1. இராணி மங்கம்மாள் சத்திரம், மதுரை[1]
  2. மோனிகர் சத்திரம் சென்னை[2]
  3. முக்தாம்பாள் சத்திரம், ஒரத்தநாடு [3]

படவரிசை[தொகு]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராணி மங்கம்மாள் சத்திரத்தில்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2014.
  2. முகமது ஹுசைன் (14 ஏப்ரல் 2018). "அன்று அன்னச் சத்திரம் இன்று மருத்துவமனை". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. தஞ்சை வெ. கோபாலன். தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு, பகுதி 21. சென்னை: http://FreeTamilEbooks.com. {{cite book}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திரம்&oldid=3929537" இலிருந்து மீள்விக்கப்பட்டது