உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பகோணம் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பகோணம் மாநகராட்சி
வகை
வகை
தலைமை
மாநகராட்சி மேயர்
சரவணன் 04 மார்ச்2022
துணை மேயர்
சு.ப. தமிழழகன் 04 மார்ச் 2022
மாநகராட்சி ஆணையாளர்
செந்தில் முருகன்
கூடும் இடம்
[மாநகர மண்டபம்]

கும்பகோணம் மாநகராட்சி (Kumbakonam City Corporation) என்பது இந்தியாவில் தென்மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பகோணம் மாநகராட்சியின் தலைமையிடம் ஆகும். தமிழ்நாட்டின் 16-வது மாநகராட்சியாக 24.08.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவித்தார். 15 அக்டோபர் 2021 அன்று 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் மாநகராட்சியை நிறுவ தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.[1][2]

கும்பகோணம் நகராட்சி[தொகு]

கும்பகோணம் 1866-ம் ஆண்டு முதல் நகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது. 4.96 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நகரில் 2011-ம் ஆண்டு கணக்கின்படி 1,40,113 பேர் 45 வார்டுகளில் வசித்து வருகின்றனர். 1866-ம் ஆண்டு மூன்றாம் நிலையாகவும், 1949 -லிருந்து முதல் நிலையாகவும், 1974-லிருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.

  • மாநகராட்சி மேயர்* ரா.சரவணன்.(காங்கிரஸ்)
  • துணை மேயர்* சு.ப. தமிழழகன்.(திமுக)
  • மாநகராட்சி ஆணையர்* ம.செந்தில்முருகன்.

மாநகராட்சிப் பகுதிகள்[தொகு]

புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் கும்பகோணம் நகராட்சி, தாராசுரம் பேரூராட்சி, வலையப்பேட்டை ஊராட்சியின் பகுதிகள், பாபுராஜபுரம் ஊராட்சியின் பகுதிகள், அசூர் ஊராட்சியின் பகுதிகள் , பழவந்தான்கட்டளை ஊராட்சி, பெருமாண்டி ஊராட்சி முழுமையாக, கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சி முழுமையாக, சாக்கோட்டை ஊராட்சி முழுமையாக, உமாமகேஸ்வரபுரம் ஊராட்சியின் பகுதிகள், தேப்பெருமாநல்லூர் ஊராட்சியின் பகுதிகள், ஏராகரம் ஊராட்சியின் பகுதிகள் மற்றும் மலையப்பநல்லூர் ஊராட்சியின் பகுதிகளைக் கொண்டது.

மாநகராட்சி பரப்பளவு[தொகு]

கும்பகோணம் நகராட்சி-யாக செயல்பட்டபோது சுமார் 12.58 சதுர கிலோமீட்டர் ஆக இருந்தது. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் இதன் பரப்பளவு சுமார் 42.95 சதுர கிலோ மீட்டராக உள்ளது. மற்றும் 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

மாநகராட்சி தேர்தல், 2022[தொகு]

2022-ஆம் ஆண்டில் இம்மாநகராட்சியின் 48 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 42 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கே. சரவணன் மற்றும் திமுகவின் தமிழழகன் துணை மேயராக வெற்றி பெற்றனர்.[3]

சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்[தொகு]

கும்பகோணம் நகரத்தின் மையத்தில் ஆதிகும்பேசுவர சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பகோணம்_மாநகராட்சி&oldid=3857275" இலிருந்து மீள்விக்கப்பட்டது