உள்ளடக்கத்துக்குச் செல்

கடவூர் தேவாங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடவூர் தேவாங்கு சரணாலயம் (Kaduvur Slender Loris Sanctuary) என்பது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் தேவாங்கு காப்பகம் ஆகும்.[1][2] தமிழக அரசு இதற்கான பூர்வாங்கப் பணிகளைத் துவக்கிட அரசாணை வெளியிட்டுள்ளது. இச்சரணாலயம் சுமார் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைய உள்ளது.

தேவாங்கு[தொகு]

தேவாங்கு இரவாடி வகையினைச் சார்ந்த சிறிய வகைப் பாலூட்டி ஆகும். இது வேளாண் பகுதிகளில் காணப்படும் விவசாயத் தீங்குயிரிகளை வேட்டையாடி அழித்து விவசாயிகளுக்கு நன்மைப் பயக்கின்றது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இந்த விலங்கு அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[3][4]

அமைவிடம்[தொகு]

கடுவூர் தேவாங்கு சரணாலயம் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், திண்டுக்கல் கிழக்கு, நத்தம் வட்டங்களிலும் கரூர் மாவட்டத்தில் கடவூர் வட்டத்தினையும் உள்ளடக்கிய வனப்பகுதியில் அமைகின்றது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "First in India, a sanctuary for slender loris in Tamil Nadu". Times of India Travel (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
  2. Bureau, The Hindu (2022-10-12). "Tamil Nadu notifies India's first slender loris sanctuary". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
  3. "Slender Loris". www.wwfindia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
  4. Radhakrishna, Sindhu; Singh, Mewa (2002-02-08). "Social Behaviour of the Slender Loris (Loris tardigradus lydekkerianus)". Folia Primatologica 73 (4): 181–196. doi:10.1159/000065426. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-5713. http://dx.doi.org/10.1159/000065426. 
  5. டிவி, தந்தி (2022-10-13). ""தெய்வ வாக்கு விலங்கு - தேவாங்கு?" வேட்டையாடப்பட காரணம் என்ன?". www.thanthitv.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.